Breaking

Wednesday, March 18, 2026

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் சற்று கடினம் - மாணவர்கள், ஆசிரியர்கள் தகவல்

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் சற்று கடினம் மாணவர்கள், ஆசிரியர்கள் தகவல் |

பத்தாம் வகுப்பு பொதுத்தேர் வில் ஆங்கில பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரி வித்தனர்.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆங் கிலப் பாடத்துக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,219 மையங்களில் 8.84 லட்சம் மாணவர்கள் எழுதினர். மேலும், 11,411 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இந்த தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறுகையில், “வினாத்தாளில் 1,2 மதிப்பெண் பகுதியில் சில கேள்விகள் கடினமாக இருந் தன. இலக்கண பகுதியும் சற்று கடினமாகவே இருந்தது. மெல்ல கற்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் பெரிதாக சிக்கல் இருக்காது. எனினும், அதிக மதிப்பெண் பெற விரும் பிய மாணவர்களுக்கு இந்த வினாத்தாள் சற்று ஏமாற்ற மாகிவிட்டது. சென்டம் எண் ணிக்கையும் குறைய வாய்ப் புள்ளது" என்றனர்.

தொடர்ந்து கணிதப் பாடத் தேர்வு வரும் 25-ம் தேதி நடை பெறவுள்ளது. ஒட்டுமொத்த மாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப். 6-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் மே 20-ல் வெளியிடப்பட உள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்

பிளஸ்2பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின் றனர். மார்ச் 26-ம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத் தும் பணி தொடங்க உள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தேர்வுகள் முடிந்த பிறகு, மாணவர்களின் விடைத்தாள் கள் மார்ச் 28-ம் தேதி மண்டல சேகரிப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு கலக்கி பிரிக்கப்படும். பின்னர், விடைத் தாள் திருத்தும் பணிக்காக தமிழகம் முழுவதும் அமைக் கப்பட்டுள்ள 83 முகாம்களுக்கு ஏப்.4-ம் தேதி கொண்டு செல் லப்படும். திருத்துதல் பணி ஏப்.8-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறும். இதில் சுமார் 46 ஆயிரம் முது நிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

விடைத் தாள் திருத்தும் பணியின்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


This newspaper clipping reports on recent public examinations in Tamil Nadu, noting that students found the 10th standard English paper to be difficult.

10th Standard English Exam: Students and teachers reported that the English paper was tough, specifically the 1-2 mark questions and the grammar section, which may lead to fewer students achieving full marks.

Exam Logistics: Over 8.84 lakh students took the English exam across 4,219 centers, with 11,411 students absent.

Upcoming Schedule: The 10th standard exams conclude on April 6th, with results expected on May 20th. The math exam is scheduled for March 25th.

Plus 2 Exam Updates: The 12th standard exams will finish on March 26th, and answer sheet evaluation will occur from April 8th to April 20th across 83 camps

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog