Breaking

Wednesday, March 18, 2026

பிளஸ் 2 கணிதத்தில் அதிக அளவில் மறைமுக வினாக்கள்: பதிலளிக்கத் திணறிய மாணவர்கள்

பிளஸ் 2 கணிதத்தில் அதிக அளவில் மறைமுக வினாக்கள்: பதிலளிக்கத் திணறிய மாணவர்கள்

பிளஸ் 2 கணிதத் தேர்வில் அதிக அளவில் மறைமுக வினாக் கள் இடம் பெற்றதால் அவற் றுக்குப் பதிலளிக்கத் திணறிய தாக மாணவர்கள் தெரிவித்த னர்.

தமிழகத்தில் மாநிலப்பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக் குப் பிறகு கணிதம், வணிகவி யல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற் றன.

இவற்றில் கணித பாடத்துக் கான வினாத்தாளில் அனைத் துப் பகுதிகளிலும் மறைமுக வினாக்கள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன. அவற்றுக் குப் பதிலளிப்பதில் சிரமமாக இருந்தது என தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கணித ஆசிரி யர்கள் கூறியதாவது: வினாத் தாளின் முதல் பகுதியில் 20 ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அவற் றில் நான்கு வினாக்கள் நன்கு யோசித்து பதிலளிக்கும் வகை யில் பாடப் பகுதிக்கு உள்ளி ருந்து கேட்கப்பட்டிருந்தன. இதேபோன்று 2, 3, 5 மதிப் பெண் பகுதிகளில் மொத்தம் 6 வினாக்கள் மறைமுக வினாக்க ளாக இருந்தன.

இவற்றைப் புரிந்து கொள்ள மாணவர்கள் சிரமப்பட்டனர். அதே வேளையில் கட்டாய வினாக்கள் ஓரளவுக்கு பதி லளிக்கக் கூடிய வகையில் கேட்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டோடு ஒப்பி டுகையில் கணிதப் பாடத்துக் கான வினாத்தாள் மாணவர்க ளுக்கு கடினமாகவே இருந்தி ருக்கும்.

எனினும் இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதிகளில் தலா மூன்று வினாக்கள் சற்று எளிதாக இருந்ததால் தேர்ச்சி மதிப்பெண் பெறுவதில் சிக் கல் இருக்காது. அதேவேளை யில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் அவர்கள் தெரிவித்தனர். என

இந்தநிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செவ்வாய்க் கிழமை நடைபெற்ற கணி தம், விலங்கியல், வணிகவி யல், நுண்ணுயிரியல், உணவு சேவை மேலாண்மை உள் ளிட்ட தேர்வுகளுக்கு பள்ளி தேர்வர்கள் 7,216, தனித்தேர் வர்கள் 2,158 என மொத்தம் 9,374 பேர் வரவில்லை.

13 பேர் பிடிபட்டனர்: தேர் வுகளில் முறைகேடுகளில் ஈடு பட்டதாகதருமபுரி மாவட்டத் தில் 9 பேர், கிருஷ்ணகிரியில் இருவர், ராமநாதபுரம் மற்றும் திருப்பூரில் தலா ஒரு மாணவர் என மொத்தம் 13 பேர் பிடிபட் டனர். இதைத் தொடர்ந்து பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 23-ஆம் தேதி உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்க ளுக்கான தேர்வுகள் நடைபெ றவுள்ளன.


This newspaper article discusses the difficulty of the Tamil Nadu Class 12 mathematics exam due to a high number of indirect questions.

Students found the exam challenging because many questions required deep thinking rather than direct application of formulas.

Mathematics teachers noted that while some questions were easy, the overall paper was harder than the previous year.

9,374 students were absent for various exams held on Tuesday, and 13 students were caught for malpractice in different districts

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog