தொடக்கம்: 1946 பதிவு எண்: 110/61
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி |
மாநில அமைப்பு ஜோஸ்.ஆர்.மாளிகை 78 பெல் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600 005.
TAMILNADU ELEMENTARY SCHOOL TEACHERS' FEDERATION
(Recognised by the Govemment of Tamil Nadu) Stale Office: J.S.R, Maaligai, 78, Bells Road, Chennai-600005
தொலைபேசி 044-2852542328510575, தொலைநகலி 044-28411443 யின் அஞ்சல்: sri@gnal.com இணையம் www.betf.org
ந. ரெங்கராஜன்
94431 80525, 00125 222
Exபொதுச் செயலாளர் &
dim gjyn negaraantes@gmail.com
இணை பொதுச் செயலாளர், அகில இந்திய ஆசிரியர் கூட்டணி (AIPTF)
rangarajames@gmall.com
:10.01.2025
a press release or official letter from the Tamilnadu Elementary School Teachers' Federation (TESTF), dated January 10, 2025. It details the federation's demands regarding the Old Pension Scheme (OPS) for government teachers and officials in Tamil Nadu, urging the government to revert to the OPS or implement an equivalent scheme.
Essential information:
The Tamil Nadu government announced a New Pension Scheme (NPS), which is not fully equivalent to the OPS.
TESTF General Secretary N. Rengarajan insists the government should provide the OPS.
Demands include stopping the 10% salary contribution from teachers or treating it as General Provident Fund (GPF) with loan/withdrawal facilities.
The government is urged to implement the new scheme from January 2026 to ensure full parity with the OPS.
பழைய ஓய்வூதியமே வழங்க வேண்டுமென அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணைப்பொதுச்செயலாளர் ந. ரெங்கராஜன் வலியுறுத்தல்.
தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இது முழுமையான பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு இணையான ஓய்வூதியம் இல்லை என்பது அனைவரின் கருத்துமாக உள்ளது. இதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் வகையில் அரசாணை உரிய விளக்கங்களோடு வெளியிடப்பட வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தில் ஆசிரியர்களிடம் 10 சதவீத ஊதிய பங்களிப்பு பெறுவதை நிறுத்த வேண்டும். 10 சதவீத பங்களிப்பு தரப்படும் நிலை தொடருமேயானால் அந்த தொகை பணி ஓய்வின் போது வட்டியுடன் வழங்கப்பட வேண்டும். 10 சதவீத பங்களிப்பு நிதியினை பொது வருங்கால வைப்பு நிதியாக மாற்றிட வேண்டும்.
ஆசிரியர்களது பங்களிப்பு தொகையிலிருந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை கடன், வருடத்திற்கு ஒரு முறை பகுதி இறுதித்தொகை பெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதற்கு முன்பு பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் அரசு அலுவலர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்குவது போல். பணியாளர் இறந்த குடும்பத்திற்கும் கருணை ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய திட்டத்தை ஜனவரி 2026 முதல் அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் அது முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையாக அமையும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் அதற்கு இணையாக இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துருக்கள் அடங்கிய ஓய்வூதியம் அறிவிக்கப்பட வேண்டும். பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தும் வரை ஆசிரியர்களும், அரசு அலுவலர்களும் பங்களிப்பு ஓய்வூதியம் அல்லது தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் இரண்டில் ஏதாவது ஒன்றை விருப்பம் தெரிவிக்கும் வாய்ப்பும் வழங்கவேண்டும். இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக தேர்தல் வாக்குறுதியின்படி ஆசிரியர் அலுவலர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அறிவிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி தீர்வு கண்டிட வேண்டுமென அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அண்படன்
Search This Blog
Monday, January 12, 2026
Comments:0
Home
ASSOCIATION
Elementary School Teachers
Old Pension Scheme
பழைய ஓய்வூதியமே வழங்க வேண்டுமென அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணைப்பொதுச்செயலாளர் ந. ரெங்கராஜன் வலியுறுத்தல்.
பழைய ஓய்வூதியமே வழங்க வேண்டுமென அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணைப்பொதுச்செயலாளர் ந. ரெங்கராஜன் வலியுறுத்தல்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.