24-வது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
சம வேலைக்கு சம ஊதியம் தொடர் பாக பள்ளிக்கல்வித் துறை அமைச் சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்படாததால், 24வது நாளாக போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்ளை போலீசார் கைது செய்தனர். நடத்திய
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக் கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ் எஸ்டிஏ) சார்பில் கடந்த டிச.26ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத் தப் பட்டு வருகின்றன. இதையடுத்து போராட் டத்தின் தீவிரத்தை கட்டுப் படுத்த எஸ் எஸ்டிஏ பொதுச்செயலா ளர் ஜே.ராபர்ட் உள்ளிட்ட தலைமை நிர்வாகி களை போலீஸார் வீட் டுக் காவலில் வைத் தனர். மேலும், போராட் டத்தில் ஈடு பட்ட ஆசிரியர் களையும் உடனுக்குடன் தேடி, தேடி கைது செய்தனர். எனினும் ஆசிரியர் களின் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில் எஸ்எஸ்டிஏ சங்க நிர் வாகி களு டன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை யில் உள்ள அவரது முகாம் அலுவல கத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத் தினார். தொடர்ந்து கல்வித் துறை அலு வலர் களும், ஆசிரியர் சங்க நிர் வாகி களு டன் பேச்சுவார்த்தை நடத் தினர். இவ்விரு பேச்சுவார்த்தைகளும் சுமார் 7 மணி நேரம் நடைபெற் றது. இதையடுத்து கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க போராட்டக் குழுவிடம் அதிகாரிகள் சிறிது அவகாசம் கேட்ட தாக கூறப்படுகிறது
இதையடுத்து இடைநிலை ஆசிரியர் கள் பொங் கல் பண்டிகையான நேற்று முன்தினம் மட்டும் போராட் டத்தில் ஈடு படவில்லை. இந்நிலை யில் கோரிக்கையை நிறைவேற்று வது குறித்து எந்த பதிலும் வரவில்லை எனக்கூறி சென்னை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று மீண்டும் போராட் டத்தைத் தொடர்ந் தனர். அவர் களை போலீஸார் கைது செய்து வாக னங் களில் ஏற்றினர். அப்போது ஆசிரியர் கள் காவல் துறையினர் இடையே தள் ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப் பட்ட ஆசிரியர்கள் அருகில் இருந்த சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவிக் கப் பட் டனர்.
இந்நிலையில் இன்று 24-நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை எழும்பூரில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்
Search This Blog
Monday, January 19, 2026
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.