1.25 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான 1600 சிறப்பு பயிற்றுநர்கள் பணி நிரந்தரம் எதிர்பார்ப்பு...!
அனைத்து துறைகளிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பு காரணமாக 27 ஆண்டு பணி நிரந்தரம் கனவு பலிக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் சிறப்பு பயிற்றுநர்கள் உள்ளனர்.
1998 முதல் 2025 வரை எவ்விதமான அடிப்படை பணி சார்ந்த சலுகைகள் இன்றி பள்ளிக்கல்வித்துறையில் DPEP மாவட்ட தொடக்க கல்வி திட்டம் SSA அனைவருக்கும் கல்வி திட்டம் SS ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆகிய திட்டத்தின் கீழ் தொடர்ந்து தற்காலிக மதிப்பூதியம் பெறும் பணியாளர்களாக வட்டார வள மையம் சிறப்பு பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
1998 முதல் 2012 வரை தொண்டு நிறுவனங்கள் மூலம் பணியாற்றினார்.
2012 இல் தொண்டு நிறுவனங்கள் மீதான பல்வேறு புகார்கள் அடிப்படையில் NGO நிறுத்தப்பட்டு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வியை செயல்படுத்த தொடங்கியது.
2012இல் எவ்விதமான பணியேற்பு ஆணையும் வழங்கப்படவில்லை. இதனால் எந்தவொரு சலுகைகள் இன்றி குறைந்த மதிப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர், ஆளுநர், கல்வி துறை அமைச்சர், பள்ளி கல்வித் துறை செயலாளர் , மாநில திட்ட இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், தலைமை செயலாளர் , நிதித்துறை அதிகாரிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரை பலமுறை நேரில் சந்தித்து TN-SS-SEADAS சிறப்பு பயிற்றுநர்கள் மாநில சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளார்கள்.
தனியார் துறையின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு இபிஎப் பிடித்தம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் அரசு ஏனோ இது வரை சிறப்பு பயிற்றுநர்களுக்கு (1998-2025) இபிஎப் பிடித்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் முன்வரவில்லை. 1.இபிஎப் பிடித்தம்
2.ஊதிய உயர்வு
3.மதிப்பூதியம் தவிர்த்து தொகுப்பூதியம்
4.மாற்றுத்திறனாளி ஊர்தி படி
5.மாவட்டம் விட்டு மாவட்டம் பணிமாறுதல்
6.விழாக்கால முன்பணம் 20,000/-
7.பணிநிரந்தர ஆணை
இந்த கோரிக்கைகளை பெறவே 24/11/2025 முதல் தற்போது வரை தொடர்ந்து காந்திய அகிம்சை வழியில் நலம் நாடி செயலி புறக்கணிப்பு தமிழ்நாடு அரசு மற்றும் உயர் அதிகாரிகளுக்கு முறையாக முன்னறிவிப்பு செய்து புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
நலம் நாடி செயலி 09.01.2024 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாநில திட்ட இயக்குநர் தொடக்க கல்வி இயக்குநர் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் முன்னிலையில் 21 வகையான மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சேவைப் பணிகளை சிறப்பு பயிற்றுநர்கள் செய்திட நலம் நாடி செயலி தொடங்கப்பட்டது.
பார்வைகுறைபாடு , செவித்திறன் குறைபாடு , கை கால் இயக்க குறைபாடு , ஆட்டிசம் , மூளை முடக்கு வாதம் , மனவளர்ச்சி குறைபாடு கற்றல் குறைபாடு , அதீத துறுதுறு செயல்பாடு கொண்டவர்கள் ஆகிய மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவையாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நலம் நாடி செயலி புறக்கணிப்பு நூதன போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
நலம் நாடி செயலி புறக்கணிப்பு செய்தாலும்..,
0-18 வயதுடைய மற்றும் 1-12 வகுப்புகளில் உள்ள 1.25இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி, பேச்சு பயிற்சி, உமிழ்நீர் கட்டுப்படுத்தும் பயிற்சி, கற்றல் குறைபாடு களைய தனிக்கவனம், அதீத துறுதுறு செயல்பாடுகள் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆகிய போற்றுதலுக்குரிய 1600 சிறப்பு பயிற்றுநர்கள் பணி காரணமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆந்திரா , கேரளா , பாண்டிச்சேரி, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பு பயிற்றுநர்களை மாநில அரசு பணிநிரந்தரமாக்கி காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வரும் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு 1-8 வகுப்புகளில் சிறப்பு பயிற்றுநர் பணியிடங்கள் உருவாக்கி பணிநிரந்தரம் செய்ய 80 கோடி தேவையென நிதித்துறை மூலமாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசு ( MHRD ) மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக ஆண்டுத்தோறும் 12 மாதங்களுக்கு 35 கோடி நிதியினை வழங்குகிறது..
எனவே 1600 சிறப்பு பயிற்றுநர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய 45 கோடி நிதியினை மட்டும் ஒதுக்கீடு செய்தாலே போதுமானது என கிருஷ்ணகிரி மாவட்ட மூத்த சிறப்பு பயிற்றுநரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் 2024 ஆண்டில் சிறந்த ஆசிரியர் மாநில விருது பெற்ற அருண் குமார் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.