தனியார் பள்ளியில் குழந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேதுபதி நகரைச் சேர்ந்த தம்பதி இளங்கோ, பவானி. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இளங்கோ சமீபத்தில்தான் ஊருக்கு வந்துள்ளார். இவரது மகள் தேஜஸ்ரீ (6) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். நேற்று காலை பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க தேவதை ஆடை அணிந்து சென்றார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை, ஆசிரியர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மானாமதுரை போலீஸார் விசாரிக்கின்றனர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.