ஆசிரியர் அமைப்புகளுடன் இணக்கமான அணுகுமுறை - மாவட்டக் கல்வி அலுவலர் உறுதி - A conciliatory approach with teacher organizations - District Education Officer assures.
ஆசிரியர் அமைப்புகளுடன் இணக்கமான அணுகுமுறை பின்பற்றப்படும் - மாவட்டக் கல்வி அலுவலர் உறுதி
நாமக்கல் மாவட்டம் டிட்டோஜாக் அமைப்பினருடன் 17.12.2025 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன
1. தொடக்கக் கல்வியில் அரையாண்டுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலரால் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் அலுவலரின் செயல்முறைகள் மற்றும் கையொப்பம் இல்லாமல் தலைமை ஆசிரியர்களின் WhatsApp குழுவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழியாக அனுப்பியது விலக்கிக் கொள்ளப்படுகிறது. 2. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு நேரங்களில் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொ.க.) அனுமதியுடன் விடுப்பு எடுக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது
3. தேர்வுகள் உரிய நேரத்தில் நடக்கவில்லை என்று ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விளக்க கடிதங்கள் ஆசிரியர் சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று கைவிடப்படுகிறது.
4. தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் சார்பாக காவல் நிலையத்துக்கு வழங்கப்பட்ட கடிதம் திரும்ப பெறப்பட்டது.
5. ஆசிரியர் அமைப்புகளுடன் இணக்கமான அணுகுமுறை பின்பற்றப்படும்
மாவட்டக் கல்வி அலுவலர்
(தொடக்கக் கல்வி) நாமக்கல்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.