தமிழகம் முழுவதும் 297 அரசுப் பள்ளிகளில் இனி குளுகுளு வகுப்பறை; 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்: ஸ்டாலின் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، ديسمبر 20، 2025

Comments:0

தமிழகம் முழுவதும் 297 அரசுப் பள்ளிகளில் இனி குளுகுளு வகுப்பறை; 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்: ஸ்டாலின் அறிவிப்பு

The recent government initiative for 297 schools in Tamil Nadu involves implementing a "cool roof" initiative to reduce classroom temperatures, not installing traditional air-conditioning units.

The government has not released a specific list of all 297 schools, but the initiative aims to expand the cool roof program to "green schools" across the state. This project uses a passive cooling method that reduced temperatures by 1.5–3°C during pilot programs.

For more information on whether a specific school in your area is part of this initiative, it is recommended to contact the local education department or the school administration directly.



தமிழகம் முழுவதும் 297 அரசுப் பள்ளிகளில் இனி குளுகுளு வகுப்பறை; 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்: ஸ்டாலின் அறிவிப்பு Air-conditioned classrooms will now be available in 297 government schools across Tamil Nadu; the temperature will be reduced by 3 degrees Celsius: Stalin's announcement.

தமிழக அரசின் 'குளிர் கூரைத் திட்டம்' (Cool Roof Initiative) தமிழ்நாடு முழுவதும் உள்ள 297 பசுமைப் பள்ளிகளுக்கு (Green Schools) விரிவுபடுத்தப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் தட்பவெப்பநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்கும் முன்னோடித் திட்டங்கள் குறித்து விவாதிக்க, தமிழ்நாடு ஆளுமைக் குழுவின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம், நேற்று (டிசம்பர் 17) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குத் தலைமை வகித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு முக்கியத் திட்டங்களை அறிவித்தார். குளிர் கூரைத் திட்டம் விரிவாக்கம்:

இந்த கூட்டத்திற்குத் தலைமை வகித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசின் 'குளிர் கூரைத் திட்டம்' (Cool Roof Initiative) தமிழ்நாடு முழுவதும் உள்ள 297 பசுமைப் பள்ளிகளுக்கு (Green Schools) விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்.

இத்திட்டத்தின் முன்னோட்டமாக, அம்பத்தூர் அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கூரைகளில் வெப்பத்தை எதிரொலிக்கும் வெள்ளைச் சாயம் பூசப்பட்டது. சென்சார்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதில், உள்ளறையின் வெப்பநிலை 1.5 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் வெற்றியின் அடிப்படையில், 2025-26ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு தட்பவெப்ப மாற்றத் திட்டச் செயல் வரைவில் இந்தத் திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு முகாம் கால அளவு அதிகரிப்பு:

பள்ளி மாணவர்களுக்கான கோடை மற்றும் குளிர்காலச் சிறப்பு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்கள், இனிமேல் ஒரு நாள் முகாமாக இல்லாமல், இரண்டு நாள் முகாம்களாக நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாவட்ட தட்பவெப்ப மாற்றத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இந்த முகாம்கள், இனி பள்ளி கல்வித் துறை மூலமாக விரிவுபடுத்தப்படும்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة