3வது நாளாக இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் - தொடரும் பரபரப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، ديسمبر 28، 2025

Comments:0

3வது நாளாக இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் - தொடரும் பரபரப்பு!!



3வது நாளாக போராட்டம்

சென்னையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 3ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

சென்னையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் போராட்டமும், தொடரும் பரபரப்பும்



சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் நீண்டநாள் கோரிக்கையான ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி நடத்தி வரும் தொடர் போராட்டம் நேற்று (சனி) இரண்டாவது நாளாக நீடித்தது. இப்போராட்டத்தின் போது, காவல்துறையினர் ஆசிரியர்களைக் கைது செய்ய முயன்றதால் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இரண்டாவது நாளாக தீவிரமடைந்த போராட்டம் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்ய வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (Secondary Grade Seniority Teachers Association - SSTA) சார்பில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, முந்தைய தினம் (வெள்ளிக்கிழமை) சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனரக அலுவலகத்தை இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று (சனி) இரண்டாவது நாளாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் உள்ள எழும்பூரில் அமைந்துள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அலுவலக நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் மற்றும் கைது நடவடிக்கை

வெவ்வேறு இடங்களில் இருந்து வந்த ஆசிரியர்களை முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தின் நுழைவுவாயில் முன்பு காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் உடனடியாக அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து, பேருந்துகளில் ஏற்றி அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். கைகலப்பு மற்றும் வாக்குவாதம் - போராட்டக்களம் ஸ்தம்பித்தது

இதற்கிடையில், முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம், தங்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், ஆசிரியர்கள் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்ததால், காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். போராட்டக்காரர்களைக் குண்டுகட்டாகத் தூக்கி கைது செய்தனர்.

ஒருசில ஆசிரியர்களை காவல்துறையினர் தரதரவென தரையில் இழுத்துச் சென்றனர். காவல்துறையினரின் பிடியில் இருந்து திமிறிய ஆசிரியர்கள் சிலரை, கை மற்றும் கால்களைப் பிடித்துத் தூக்கிச் சென்று பேருந்துகளில் ஏற்றினர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையினருடன் ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஆசிரியர்கள் பலத்த கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தின் தீவிரத்தின் காரணமாக, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியைகள் சிலர் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்தவர்களுக்கு உடனடியாக அங்கிருந்த முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 1,300க்கும் மேற்பட்டோர் கைது; தொடரும் அச்சுறுத்தல்

காலை 11 மணியளவில் தொடங்கிய இந்தப் போராட்டம், மதியம் 3 மணி அளவில் முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 1,300-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். "எங்களது நியாயமான கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்" என்று கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் உறுதியுடன் அறிவித்துள்ளனர்.

ஆசிரியர்களின் இந்தப் போராட்டம் நடைபெற்ற அதே இடத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் ஒன்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக இந்தச் சிறப்பு முகாம் பணியில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட்டது.

மாலை விடுவிப்பு; இன்று மீண்டும் போராட்டம்

இதற்கிடையில், மதியம் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது


இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் சென்னையில் 2வது நாளாக நீடிப்பு

சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை, இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் முற்றுகையிட்டு, நேற்றும் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக துாக்கி கைது செய்தனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென் னையில் இரண்டாவது நாளாக இடை நிலை ஆசிரி யர்கள், குடும் பத்தினருடன் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்த னர்.

கல்வித் துறை தொடக்கக் யில், 2009ம் ஆண்டுக்கு பின்பு நியமிக கப்பட்ட இடை நிலை ஆசிரியர்கள், தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதியின் படி, சம வேலைக்கு சம ஊதி யம் கேட்டு தொடர் போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ., வளாகத்தை, இடைநிலை ஆசிரியர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர் களை தடுத்து நிறுத்திய போலீ சார், குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

இதற்கிடையில், இடைநிலை ஆசிரியர்களை பேச்சுக்கு அழைத்தது, பள்ளிக்கல்வித் துறை. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் நடந்த பேச்சில் உடன்பாடு எட்டப்பட வில்லை. இந்நிலையில், இரண்டாவது நாளாக, சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை, இடை நிலை ஆசிரியர்கள் தங்கள் குழந் தைகளுடன் முற்றுகையிட்டு, நேற்றும் போராட்டம் நடத்தினர்.

அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் குண்டுக கட்டாக கைது செய்தனர். குழந்தைகள், தங்கள் பெற்றோரை இறுக பற்றிக் கொண்டு கதறி அழுதனர்.

இந்த கைது நடவடிக்கை யின்போது, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலர் ராபர்ட் உட் பட சில ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப் பட்டது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கை விரலில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்ப டுகிறது. இதையடுத்து, அவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவம் னையில் சிகிச்சைக்காக அனும் திக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஆசிரி யர்களை அரசு பஸ்களில் ஏற் றிய போலீசார், நேற்று முன்தி னம் போல சென்னையை வலம் வந்தனர். பொறுமையை இழந்த ஆசிரியர்கள், பஸ்சில் இருந்து கீழே இறங்கி, கோயம்பேடு 100 அடி சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, போராட் டம் நடத்திய ஆசிரியர்கள் அனைவரும் திருமண மண்ட பங்களில் அடைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة