நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு Applications are invited for the post of Medical Officer at the urban health center.
காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம், தேசிய நலக்குழுமத்தின் கீழ் செயல்படும் நகர்ப்புற நலவாழ்வு மையத்திற்கு, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஒரு மருத்துவ அலுவலர் பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்ப விவரங்கள்:
பணி: மருத்துவ அலுவலர் (தற்காலிக ஒப்பந்த அடிப்படை)
நிறுவனம்: நகர்ப்புற நலவாழ்வு மையம், காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை / தேசிய நலக்குழுமம். விண்ணப்பப் படிவம்: https://kancheepuram.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42-ஏ, ரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் - 631 501.
விண்ணப்பங்களை அனுப்பும் முறை: நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
கடைசி நாள்: ஜனவரி 3.
தகவல் வெளியீடு: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.