மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர் போக்சோவில் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 16, 2025

Comments:0

மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர் போக்சோவில் கைது



மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர் போக்சோவில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (41 வயது). இவர் தனது வீட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வருகிறார். அதில் கருங்கல் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியும், அவரது சகோதரரும் அடங்குவர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி, அவரது சகோதரர் உள்பட ஏராளமானோருக்கு ஆசிரியர் மகேஷ் பாடங்கள் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 7-ம் வகுப்பு மாணவியை மட்டும் தனி அறைக்கு ஆசிரியர் மகேஷ் அழைத்துச் சென்றார். பின்னர் திடீரென மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மாணவி, பதற்றத்துடன் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு சகோதரர் அந்த அறைக்கு சென்று பார்த்த பொழுது தங்கையிடம் ஆசிரியர் அத்துமீறிய செயலை பார்த்து அசிச்சடைந்தார். பின்னர் அவர் தகாத செயலில் ஈடுபட்ட ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்தார். பிறகு தங்கையை அங்கிருந்து மீட்டு உடனடியாக வீட்டுக்கு கிளம்பினார்.

டியூசனில் நடந்த மோசமான சம்பவத்தை அவர்கள் தங்களுடைய தாயாரிடம் தெரிவித்தனர் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் இதுபற்றி குளச்சல் மகளிர் போலீசில் புகார்அளித்தார். அந்த புகாரின்பேரில் மகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரைபோலீசார் கைது செய்தனர். கைதான மகேசுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews