பள்ளிக் கல்வி இதழ்களில் அதிக படைப்பாளர்களுக்கு வாய்ப்பு -
கல்வித் துறை நடவடிக்கை
பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்படும் தேன்சிட்டு, புது ஊஞ்சல், கனவு ஆசிரியர் ஆகிய இதழ்களில் அதிகளவிலான படைப் பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகை யில் கல்வித் துறை நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.
அதன்படி மாணவர்கள், ஆசிரியர் கள் தங்களது படைப்புகளை நேரடி யாக அனுப்பும் வகையில் மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரி யர்களுக்கென பருவ இதழ்களை பள் ளிக்கல்வித் துறை கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கியது. அதன்படி, 4 மற்றும் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 'பாஞ்சல்' என்கிற இதழும், 6-ஆம் வகுப்பில் இருந்து 9. ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கு தேன்சிட்டு என்ற இதழும் மாதமிரு முறை இதழாக வெளியிடப் படுகின்றன.
குழந்தைகளின் ஆக்கங்
களோடு, அவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவை இந்த இதழ்களில் வெளியிடப்படும்.
குறைந்தளவில் படைப்புகள்: அதே போன்று ஆசிரியர்களுக்கென வெளி யிடப்படும் 'கனவு ஆசிரியர்' என்கிற மாத இதழில் ஆசிரியர்களின் படைப் புகளோடும் வகுப்பறை அனுபவங்கள், அவர்களுக்கான சிறப்புக் கட்டுரைகள் வெளியாகின்றன.
இந்தப் படைப்புகள் அனைத்தும் அஞ்சல் மூலமாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு அச்சிட்டு வெளியி டப்பட்டன. இதனால் குறைந்த சதவீத மாணவர்கள், ஆசிரியர்களே இவ்வி தழ்களுக்கு படைப்புகள் அனுப்பி வரு கின்றனர். அதேபோன்று ஒரு முறை
வெளிவந்த படைப்பாளியின் அடுத்த டுத்த படைப்புகளே மீண்டும் பெறப் படுகின்றன. இதனால் திறமையுள்ள அனைத்து ஆசிரியர்கள், மாணவர்க ளுக்கும் சம வாய்ப்பு வழங்குவது சவா லாக உள்ளது.
எனவே, தமிழ்நாடு பாடநூல் மற் றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வழிகாட்டுதலின்படி மூன்று இதழ்சு விலும் இடம்பெறும் படைப்புகளுக் கான நெறிமுறைகளைப் பகிர்ந்தால் அவர்கள் தத்தம் படைப்புகளை ஆசிரி யர் குழுவுக்கே நேரடியாக அனுப்பிடும். நிலை உருவாகும். இது குறித்து வழி காட்டுதல்கள் முதன்மைக் கல்வி அலு வலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள் ளன. இதனை அவர்கள் அனைத்து அர சுப் பள்ளிகளுக்கும் பகிர்ந்து படைப் புத்திறன் உள்ள அனைவரையும் ஒருங்
கிணைத்து வழிநடத்தி படைப்புகளை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பெற்றுத்தர வேண்டும்.
பாகுபாடு கூடாது: சிறந்த படைப்பு கனை உருவாக்கிய தலைமை ஆசிரியர் கள், ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் போது பாலினம், மதம், இனம், பணி அனுபவம், உடற்தகுதி என எவ்வித பாகுபாடும் இருக்கக் கூடாது. எனவே, மாணவர்கள் தங்களது படைப்புகளை புது ஊஞ்சல் இதழுக்கும் (4.5 வகுப்பு கள்) puthuoonjal@tnschools.gov.in, தேன்சிட்டு இதழுக்கும் (6முதல் 9 வகுப் புகள்) thenchittu@tnschools.gov.in, ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் இதழுக்கு kanavuaasiriyar@tnschools.gov.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கும் நேரடியாக அனுப்பி வைக்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Thursday, May 22, 2025
Comments:0
பள்ளிக் கல்வி இதழ்களில் அதிக படைப்பாளர்களுக்கு வாய்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.