533 பள்ளிகளுக்கு 'போஸ்கோ' நிறுவனம் ரூ.71 லட்சத்திற்கு உபகரணங்கள் வழங்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 22, 2025

Comments:0

533 பள்ளிகளுக்கு 'போஸ்கோ' நிறுவனம் ரூ.71 லட்சத்திற்கு உபகரணங்கள் வழங்கல்



533 பள்ளிகளுக்கு 'போஸ்கோ' நிறுவனம் ரூ.71 லட்சத்திற்கு உபகரணங்கள் வழங்கல்

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய ஐந்து தாலுக்காகளில் 533 அரசு துவக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இப்பள்ளிகளில் பயின்று வரும் 1ம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ - மாணவியர், எந்தவித தடையுமின்றி கல்வி பயிலவும், எழுதவும் வசதியாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார். கோயம்புத்தூர்

அந்த வகையில், காஞ்சிபுரம் ஒன்றியத்தில், 107 பள்ளிகள், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் 104, குன்றத்தூர் ஒன்றியத்தில் 90 பள்ளிகளில், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 109 பள்ளிகளில், உத்திரமேரூர் ஒன்றியத்தில் 123 பள்ளிகளில் என, மொத்தம் 533 பள்ளிகளுக்கு, 'போஸ்கோ இந்தியா' நிறுவனத்தின் பங்களிப்பில், 71 லட்சத்து 52,216 ரூபாய் மதிப்பிலான 1,739 மேசைகள் மற்றும் 6,956 நாற்காலிகள் நேற்று வழங்கப்பட்டன.

மொளச்சூர் அரசு துவக்கப் பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில், 'போஸ்கோ இந்தியா' நிறுவன நிர்வாக இயக்குனர் ஜாங் வூங் காங், மாவட்டக் தொடக்கக் கல்வி அலுவலர் எழில், வட்டாரக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews