புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு ஜூன் 15-ல் தேர்வு: 5.38 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு, ஜூன் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 5.38 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டத்தின்கீழ் முதல் 3 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டில் ரூ.25.80 கோடியில் 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்க பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்குநரகம் முடிவு செய்தது. முதல்கட்டமாக 30,191 மையங்கள் மூலமாக 8 திருநங்கைகள் உட்பட மொத்தம் 5 லட்சத்து 38,156 கற்போர்களுக்கு கடந்த நவம்பர் முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு, ஜூன் 15-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தேர்வை சிறந்த முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலமாக துறை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
Search This Blog
Thursday, May 22, 2025
Comments:0
Home
Latest News
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு ஜூன் 15-ல் தேர்வு: 5.38 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு ஜூன் 15-ல் தேர்வு: 5.38 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.