WhatsApp - ல் புதிய செம அப்டேட் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 27, 2025

Comments:0

WhatsApp - ல் புதிய செம அப்டேட்



WhatsApp - ல் புதிய செம அப்டேட்!

வாட்ஸ்ஆப்பில் புதிய செம அப்டேட்!!!

வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பயனர்கள் நண்பர்களுடன் உரையாடும்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஆப்சன் வாட்ஸ்ஆப்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. வாட்ஸ்ஆப் உருவாக்கிய ஸ்டிக்கரைத் தவிர வேறு ஸ்டிக்கரை பயனர்கள் பயன்படுத்த வேண்டுமென்றால், ஸ்டிக்கர் உருவாக்கும் வேறொரு செயலி மூலம் ஸ்டிக்கரை உருவாக்கி அதன்பிறகு வாட்ஸ்ஆப்பில் பயன்படுத்தும் வகையில் இருந்தது.

இந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில், வாட்ஸ்ஆப் பயனர்கள் வேறு செயலிக்கு சென்று ஸ்டிக்கரை உருவாக்கும் சிரமத்தை தவிர்க்கும் விதமாக வாட்ஸ்ஆப்பிலேயெ ஸ்டிக்கரை உருவாக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டது.

தற்போது, பயனர்கள் உருவாக்கும் ஸ்டிக்கரை ஒருங்கிணைத்து வைக்கும் வகையில் பேக் ஆப்சன் கொண்டுவரப்பட்டது. எடுத்துக்காட்டாக, பல்வேறு பூக்களின் புகைப்படங்கள் ஸ்டிக்கராக உருவாக்கி வைத்திருந்தால், அதை அனைத்தையும் ஒன்றிணைத்து பூக்கள் என்ற பேக்கேஜில் கொண்டு செல்லும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பேக்கேஜில் உள்ள ஸ்டிக்கரை தங்களின் நண்பர்களுக்கு மொத்தமாகவும் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டிக்கர் பேக்கை உருவாக்க:

1. ஸ்டிக்கர் ஆப்சனைத் திறக்கவும்.

2. பென் இலட்சினையைத் தொடவும்.

3. நீங்கள் சேர்க்க விரும்பும் ஸ்டிக்கர்களைத் தேர்ந்தெடுத்து, அந்த பேக்கிற்கு பொருத்தமான பெயரை வைத்துக் கொள்ளலாம்.

4. அந்த ஸ்டிக்கர் பேக் அருகிலுள்ள மூன்று புள்ளிகளைத் தொட்டு, எவ்வளவு ஸ்டிக்கரை வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் அனுப்பிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews