உங்கள் குழந்தை அரசு மருத்துவக் கல்லூரிகள், JIPMER, AIIMS, IIT & NIT போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 25, 2025

Comments:0

உங்கள் குழந்தை அரசு மருத்துவக் கல்லூரிகள், JIPMER, AIIMS, IIT & NIT போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டுமா?

images%20-%202025-04-24T063722.029


உங்கள் குழந்தை அரசு மருத்துவக் கல்லூரிகள், JIPMER, AIIMS, IIT & NIT போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டுமா?

உங்கள் குழந்தை அரசு மருத்துவக் கல்லூரிகள், JIPMER, AIIMS, IIT & NIT போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டுமா? உங்கள் குழந்தை அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை படைக்க வேண்டுமா ?

IIT & NIT போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உங்கள் குழந்தை படித்து வாழ்வில் உயர வேண்டுமா ?

அப்படியானால் உடனே உங்கள் குழந்தைகளை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ந்து விடுங்கள்.தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு

தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள்

1 முதல் 12 வகுப்பு வரை அனைத்து குழந்தைகளுக்குமான திட்டங்கள் 1. பாடப் புத்தகங்கள்

2. புத்தகப் பைகள்

3. பேருந்து பயண அட்டை

4. வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.75000 வைப்புத் தொகை (TN Power Finance Corpn. Ltd.FD)

5. விபத்து நிவாரணத் திட்டம்.

1 முதல் 10 வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கான திட்டங்கள்

6. நோட்டு புத்தகங்கள்

7. காலணிகள் Shoes and Socks,

8. சத்துணவுத் திட்டம்.

9. மிதிவண்டிகள்

10. Special Cash Incentive Scheme

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மட்டும்

11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மட்டும் 6 முதல் 10 வகுப்புகள் வரை

11. தேச வரைபட புத்தகம். (Atlas)

6 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு மட்டும்

12. Geometry Boxes. (Also for New Students in Class 7 and 8)

1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு மட்டும்

13. சீருடை 4 Sets.

14. woollen Sweaters (only for Hilly Regions)

15. Rain Coats Boots Socks (only for Hilly Regions)

1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு மட்டும்

16. CM Breakfast Scheme.

17. Crayon Class 1 & 2 & Colour Pencils class 3-5

1 முதல் 12 வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றால் தமிழ்நாடு அரசுப்பணியில் 20% PSTM - Persons Studied Under Tamil Medium முன்னுரிமை.

6 - 12 வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு

BE MBBS BDS BVSc BFSC BSC Agri BALLB போன்ற தொழில் படிப்புகளில் 7.5 % இட ஒதுக்கீடு.

எந்த கல்லூரியில் சேர்ந்து படித்தாலும் மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் & தமிழ்ப்புதல்வன் திட்டம். 👉👉👉 எட்டாம் வகுப்பில் NMMS தேர்வு எழுதும் வாய்ப்பு. தேர்ச்சி பெற்றாம் மாதம் ரூ.1000 உதவித் தொகை 4 ஆண்டுகளுக்கு.

👉👉9 ஆம் வகுப்பில் TRUST தேர்வு. வருடம் ரூ.1000 ஊக்கத் தொகை.

👉👉 10 ஆம் வகுப்பில் முதலமைச்சர் திறனறித் தேர்வு. தேர்ச்சி பெறும் 1000 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை.

👉👉11 ஆம் வகுப்பில் தமிழ்த் திறனறித் தேர்வு. தேர்ச்சி பெறும் 1500 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1500 ஊக்கத் தொகை.

👉👉 12 ஆம் வகுப்பில் "நான் முதல்வன் திட்டம் " மூலம்

CLAT UCEED NID NIFT JEE CUET NCET CEE NEET FDDI IMU -CET NFSU-NFAT IISER - IAT NISER-NEST NATA ISI CMI IPMAT JIPMAT NCHM - JEE AIIMS JIPMER NIMHANS ICI IITTM APU BITSAT AIISH NIEPMD MSE MSSW போன்ற போட்டித் தேர்வுகள் மூலம் குழந்தைகளை நாட்டின் தலை சிறந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பது.

மேலும் தகவல்களுக்கு 14417

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84692496