பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் , மாண்புமிகு அமைச்சர் அவர்களது அறிவிப்புகள்.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 25, 2025

Comments:0

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் , மாண்புமிகு அமைச்சர் அவர்களது அறிவிப்புகள்..

IMG_20250425_132959


பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் , மாண்புமிகு அமைச்சர் அவர்களது அறிவிப்புகள்..

1. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் 13 லட்சம் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதத் திறன்களை மேம்படுத்த திறன் என்னும் முனைப்பு இயக்கம் ரூ.19 கோடி மதிப்பீட்டில் ஆரம்பம்!

2. வாசிப்பு இயக்கம் மூலமாக பள்ளி நூலகங்களில் வாசிப்பு வாரம். புத்தகக் கழகங்கள் மூலமாக மாணவர்களின் அறிவுத் தேடல், வாசிப்புத் திறன் மேம்படுத்தப்படும்! 3. மாணவர்களிடம் வாழ்வியல் திறன் விழுமியக் கல்வியை நடைமுறைப்படுத்த ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் விழிப்புணர்வுக் கட்டகங்கள். வாரம் ஒரு பாடவேளை ஒதுக்கீடு!

4. கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற 400 மாணவ, மாணவிகளுக்கு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில், ‘கலைச்சிற்பி’ கோடைக்கால சிறப்பு முகாம்!

5. அரசுப் பள்ளிகளில் பயிலும் 46 ஆயிரம் மாற்றுத்திறன் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தை மேம்படுத்த ரூ.4 கோடி மதிப்பீட்டில் விளையாட்டுச் சாதனங்கள் மற்றும் பயிற்சிகள்!

6. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் தொழிற்பயிற்சி ஆய்வகங்கள் மூலம் 12 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி!

7. அரசுப் பொதுத் தேர்வுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சியைப் பெற்றுத் தரும் அரசுப் பள்ளிகளுக்கும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள்! 8. சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்கள் 2,300 பேருக்கு ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம்!

9. குழந்தைநேய வகுப்பறைச் சூழலை உருவாக்க 6,478 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளுக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் தளவாடப் பொருள்கள்

10. தொலைதூரக் கிராமங்கள், மலைக்கிராமங்கள், புதிய குடியேற்றப் பகுதிகளில், புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். மாநிலம் முழுக்க 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்! புத்தொளி பெறும் புதிய பள்ளிகள்!

11. அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்கள், அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக நியமிக்கப்படுவார்கள்!

12. அரசுப் பள்ளிகளின் புதிய நலத்திட்டங்களை பொதுமக்களிடம் விளக்கி, கடந்த ஆண்டைவிட கூடுதலாக மாணவர்களைச் சேர்க்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள்!

13. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் வகுப்பறைப் பயன்பாட்டிற்கென கைப்பிரதிப் பாடநூல்கள் வழங்கப்படும்!

14. மாணவர் திறன் மேம்படுத்த, நவீன தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்ள, கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும். முதற்கட்டமாக ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு! நவீனமாகும் பாடநூல்கள்! 15. மாணவர் கற்றல் விளைவுகளை மேம்படுத்திட 1.25 லட்சம் ஆசிரியர்களுக்கு ரூ.28 கோடி மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி!

16. தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் 6,000 தமிழாசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் கற்பித்தல் திறன் பயிற்சி!

17. தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் 90 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புஉணர்வுப் பயிற்சி!

18. பாரதியார், புரட்சிக்கவி பாரதிதாசன் கவிதைகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்!

19. தமிழ்நாட்டு வரலாற்றையும் பண்பாட்டையும் இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில், அரிய வரலா ற்று நூல்கள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்!

20. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பயன்பெறும் வகையில் அரசின் துறைத் தேர்வுகளுக்கான 25 நூல்கள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்!

21. சமூகநீதி மற்றும் பெண்ணுரிமை ஆய்வுகளுக்கென தந்தை பெரியார் குறித்த இலக்கியப் பதிவுகள், 5 தொகுதிகளாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்!

22. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கருத்தரங்கக்கூடம்! பொலிவுபெறும் அண்ணா நூற்றாண்டு நூலகம் 23. முப்பது நூலகக் கட்டடங்கள் மறுகட்டமைப்பு 125 நூலகங்களில் கழிப்பறை வசதி ரூ. 30 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்!

24. வயதுவந்தோர் கல்வித் திட்டங்களில் பயிலும் கற்போருக்கு, வருவாய் ஈட்டும் திறனை மேம்படுத்த செயற்கை ஆபரணங்கள், பொம்மைகள், மெழுகு மற்றும் வாசனைப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட தொழிற்திறன் பயிற்சிகள் வழங்கப்படும்!

25. இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் பொருட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84731467