பள்ளிக் கல்வித் துறையில் TNPSC மூலமாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணை - அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 19, 2025

Comments:0

பள்ளிக் கல்வித் துறையில் TNPSC மூலமாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணை - அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20TNPSC%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%20-%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.%20%20


பள்ளிக் கல்வித் துறையில் TNPSC மூலமாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணை - அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். - Minister Anbil Mahesh issued appointment orders to those selected through TNPSC in the School Education Department.

பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட 217 இளநிலை உதவியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்....

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 217 பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 217 பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 186 நேரடி நியமன இளநிலை உதவியாளர்களுக்கு 15.03.2025 அன்று இணைய வழியில் பணிநியமன கலந்தாய்வு நடத்தப்பட்டது. அக்கலந்தாய்வில் தங்களுக்கு விருப்பமான பணியிடங்களை தேர்வு செய்த 186 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு பொது நூலகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட 24 பணிநாடுநர்களுக்கும். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 7 பணிநாடுநர்களுக்கும் ஆக மொத்தம் 217 பணிநாடுநர்களுக்கு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அரசு சிறப்பு செயலர் திருமதி.எஸ்.ஜெயந்தி S.ஆ.ப. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு பொது நூலகத் துறை இயக்குநர் முனைவர்.பொ.சங்கர் பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர்.ச.கண்ணப்பன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலர் முனைவர்.பெ.குப்புசாமி. இணை இயக்குநர் முனைவர்.த.இராஜேந்திரன், சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.புகழேந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

CLICK HERE TO DOWNLOAD பணி நியமன ஆணை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84606352