SIDP 2.0 - ஒரு லட்சம் பரிசுகள் பெற்ற பள்ளிகளின் படைப்புகள் கண்காட்சி. SIDP 3.0 மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசு பள்ளிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 12, 2024

Comments:0

SIDP 2.0 - ஒரு லட்சம் பரிசுகள் பெற்ற பள்ளிகளின் படைப்புகள் கண்காட்சி. SIDP 3.0 மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசு பள்ளிகள்



SIDP 2.0 - ஒரு லட்சம் பரிசுகள் பெற்ற பள்ளிகளின் படைப்புகள் கண்காட்சி. SIDP 3.0 மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசு பள்ளிகள்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நடைபெற்ற புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சியை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று (11/11/24) துவக்கி வைத்து, மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு பரிசுகளை வழங்கினர். கல்லூரி மாணவர் புத்தாக்க கண்டுபிடிப்பிறகான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதல் இடம் பிடித்த 20 கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ₹1 லட்சம் வீதம் ₹ 20லட்சமும், 2ம் இடம் பெற்ற 20 கண்டுபிடிப்புகளுக்கு தலா ₹25,000 வீதம் ₹5 லட்சமும், 3ம் இடம் பெற்ற 20 கண்டுபிடிப்புகளுக்கு தலா ₹ 10,000 வீதம் ₹2 லட்சமும், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடம் பிடித்த 10 அணிகளுக்கு தலா ₹ 1 லட்சம் வீதம், ₹10 லட்சமும், 2ம் இடம் பெற்ற பத்து கண்டுபிடிப்புகளுக்கு தலா ₹25,000 வீதம் ₹2,50,000 ஆக மொத்தம் ரூபாய் 39.50 லட்சம் ரொக்க பரிசுகளை மாணவ மாணவிகளுக்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் வழங்கினர்.

*தமிழகம் முழுவதும் பள்ளி மாணாக்கர்களிடமிருந்து பெறப்பட்ட புதிய (SIDP) கண்டுபிடிப்புகளிலிருந்து, 10 பள்ளிகளை தெரிவு செய்து, தலா 1 லட்சம் வெற்றிப்பரிசுகளாக தரப்பட்டன.*

*கோவை மாவட்டம் கதிரிமில்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின், சென்சார் கார்பேஜ் அலர்ட், அரியலூர் மாவட்ட நீர் மேலாண்மை, உள்ளிட்ட பத்து கண்டுபிடிப்புகளை கண்டு அமைச்சர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பாராட்டினர்.* பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் முதல்முறையாக தொழில்முனைவோருக்கு கல்லூரி உருவாக்கப்பட உள்ளது. 260 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய வகையில், 10,260 சதுர அடியில் ஒரு கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் அந்தக் கல்லூரி இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான இணைய வழி விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. வரவேற்பை பொறுத்து தமிழ்நாடு முழுக்க எண்ணிக்கை உயர்த்தப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் துறையின் மூலம் மூன்றரை வருடங்களில் ₹1,256 கோடி மானியம் தந்து, ₹3,768 கோடி வங்கி கடன் பெற்றுத்தந்து 40,590 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோராக உருவாக்கப்பட்டு தமிழ்நாடு முழுக்க சமச்சீரான தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews