முதல்வர் தலைமையில் நடக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 07, 2024

Comments:0

முதல்வர் தலைமையில் நடக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்



முதல்வர் தலைமையில் நடக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்

முதல்வர் தலைமையில் 8-11-2024 அன்று நடக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் :

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தல் : வருகின்ற நவம்பர் 8 ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று முதல்வர் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்றி அரசாணை வெளியிட்டு பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை அரசாணைகளாக்க வேண்டும் என முதல்வர் தலைமையில் 16-09-2021 அன்று நடந்த அரசு செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது தமிழ்நாடு அரசு 729 வது செய்தி வெளியீட்டு எண் ஆகும்.

மேலும் 18-09-2021 மற்றும் 22-06-2023 என இரண்டு முறை பள்ளிக்கல்வித்துறை சார்பில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்பட அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டம் நடத்தி கோரிக்கை பெறப்பட்டு, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என சொல்லப்பட்டது.

ஆனால் பணி நிரந்தரம் செய்யாமல் 42 மாதங்கள் முடிந்துவிட்டது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பணி நிரந்தரம் கேட்டு நடந்த போராட்டத்தின்போது,

2,500 ரூபாய் சம்பள உயர்வு மற்றும் 10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்ற

பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பில்,

இன்னும் மருத்துவ காப்பீடுக்கு அரசாணைகூட வெளியிடவில்லை.

மே மாதம் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கவில்லை.

இந்த காலத்தில் 12,500 ரூபாய் குறைந்த சம்பளம் கிடைப்பதால் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

13 ஆண்டுகளாக தற்காலிக நிலையில் பகுதிநேர ஆசிரியர்களாக,

3,700 உடற்கல்வி,

3,700 ஓவியம்,

2 ஆயிரம் கணினி 1,700 தையல்

300 இசை,

20 தோட்டக்கலை,

60 கட்டிடக்கலை,

200 வாழ்வியல்திறன் ஆகிய பாடங்களில் பணிபுரிகின்ற, 12 ஆயிரம் பேருக்கும் காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் என பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இதை இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் தான் செய்ய வேண்டும்.

ஒரு கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தியதை போல, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

********

S.செந்தில்குமார்,

மாநில ஒருங்கிணைப்பாளர்,

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,

செல் : 9487257203

CLICK HERE TO DOWNLOAD 12000 PART TIME TEACHERS-SENTHILKUMAR PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews