Breaking

Monday, November 18, 2024

ரூ.1 லட்சம் கல்வி உதவி தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்



முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.1 லட்சம் கல்வி உதவி தொகை: மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கு வட சென்னை மாவட்டத்தை சார்ந்த முழு நேர, பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.100000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து ஆராய்ச்சி பயிலும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டதற்கான இருப்பிட சான்று முதலியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வட சென்னை, மாவட்ட ஆட்சியரக வளாகம், சென்னை என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog