பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை - முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்கள். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 09, 2024

Comments:0

பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை - முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்கள்.



பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை - முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்கள்.

பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை - முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்கள்...

1. பள்ளி வளாகத்தினுள் எக்காரணத்தை முன்னிட்டும் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது.

2. அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கூட வகுப்பறைகளில் மாணவர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேச அனுமதிக்க கூடாது. 3. அரசுத்துறை சாராத மருத்துவர்கள் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்க கூடாது.

4. முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி இன்றி எந்தவொரு கல்வி சாரா நிகழ்ச்சியோ விழாவோ பள்ளியில் நடைபெற கூடாது.

5. RBSK மருத்துவ குழுவினர் மட்டுமே மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும்.

6. எக்காரணத்தை முன்னிட்டும் மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்ல கூடாது.

7. போட்டிகள் முதலிய நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்வதாக இருப்பினும் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும்.

8. வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்று வருமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 9. வகுப்பறையில் பாடம் நடத்த எக்காரணத்தை முன்னிட்டும் வெளி நபர்களைப் பயன்படுத்தக் கூடாது. நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவால் நியமனம் செய்யப்பட்டு அரசால் ஊதியம் பெற்று வரும் தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே பள்ளியில் பாடம் நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். வேறு நபர்கள் பள்ளியில் பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தால் சார்ந்த ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

10. EMIS பணிகளை AIs மூலம் செய்ய வேண்டும். ஆசிரியர்களை EMIS பணிகள் செய்யப் பயன்படுத்தக் கூடாது.

11. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மதிய உணவிற்காக பள்ளியை விட்டு வெளியே செல்லக் கூடாது.

12. மாணவர்களிடம்நேர்மறையான சிந்தனைகளை விதைக்கும் வண்ணம் ஆசிரிய ர்களின் பேச்சு இருக்க வேண்டும். எதிர்மறையான பேச்சுகள், இரட்டை அர்த்தமுள்ள பேச்சுகள் முதலியவற்றை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.

13. ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்கள் அல்லது மாணவிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்கள் வருகை புரியாததற்கான காரணம் முதலியவற்றைக் கேட்டு அறிய வேண்டும்.

14. விடுமுறை நாட்களில் பள்ளியில் எந்த ஒரு வெளி நிகழ்ச்சியும் நடக்க அனுமதிக்க கூடாது.

15. அரசுத்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருப்பினும் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும். 16. துறை சார்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் ஆகியவர்களை பள்ளிக்கு அழைத்து மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால், அவர்கள் பேச உள்ள பொருள் குறித்து முன்னரே முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவித்து முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

17. எக்காரணத்தை முன்னிட்டும் மாணவர்களிடம் சாதி, மதம் தொடர்பான கருத்துக்களை ஆசிரியர்கள் பேசுதல் கூடாது.

18. அரசியல்வாதிகள் யாரையும் பள்ளியில் அனுமதிக்க கூடாது

19. தலைமையாசிரியர்கள் அனைத்து அறிவுரைகளையும் புரிந்து கொண்டு பள்ளியில் பிரச்சனை இல்லாமல் வகையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது

மேற்காணும் முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews