புதுச்சேரி - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனி வாரத்தில் 5 நாட்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி!
அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மாலை நேரத்தில் சிறுதானிய சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறுதானிய சிற்றுண்டி:
தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு அரசு பள்ளிகளில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதாவது அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் உயர்நுட்ப ஆய்வகம், புதுமை திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய், தமிழ் புலவன் திட்டத்தின் மூலம் இனி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காலை நேர சிற்றுண்டி என அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் வாரத்திற்கு 2 முறை சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அதை வாரத்தில் 5 நாட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.