இந்தியாவில் டாப் 100 இடங்களில் தமிழ்நாட்டில் 37 கல்லூரிகள்.. முதலிடம் இடம் பிடித்த கல்லூரி எது தெரியுமா..?
2024ஆம் ஆண்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை மத்திய அரசின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) வெளியிட்டுள்ளது.
அதில் இந்தாண்டுக்கான சிறந்த கல்லூரிகள் பிரிவில் டெல்லியில் உள்ள இந்து கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. மேலும் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டில் இருந்து 37 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) இந்திய அளவில் 2024ஆம் ஆண்டிற்கான பல்வேறு பிரிவுகளில் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பட்டியலை வெளியிட்டுள்ளது. அனைத்து பிரிவிலும் சிறந்த கல்வி நிறுவனம், பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம், பொறியியல் கல்லூரி, மேனேஜ்மெண்ட், பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், விவசாயம் & திட்டம், விவசாயம் & தொடர்புடைய பிரிவு மற்றும் புதுமை ஆகிய பிரிவுகளில் இந்தியா முழுவதும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டியல் இடம்பெற்றுள்ளது.
திறந்தநிலை பல்கலைக்கழகம், திறன் பல்கலைக்கழகம் மற்றும் மாநில அரசு பல்கலைக்கழகம் ஆகிய பிரிவுகள் இந்தாண்டு புதிதாக சேர்க்கப்பட்டு மொத்தம் 16 பிரிவுகளில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுள்ளது. 10,845 கல்லூரிகள் இந்த தரவரிசை பட்டியலில் பதிவு செய்யப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. தென் பகுதியில் 4,355 கல்லூரிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் கல்லூரிகளுக்கான பிரிவில் 3,371 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. அதில் தென் இந்தியாவில் 1,217 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
முதல் 10 இடத்தைப் பிடித்த கல்லூரிகள் :
சிறந்த கல்லூரிகள் பிரிவில் முதல் 10 இடத்தில் தமிழ்நாட்டில் இருந்து 2 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. கோவையில் உள்ள PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 7வது இடத்திலும், சென்னையில் உள்ள லயோலா கல்லூரி 8வது இடத்திலும் உள்ளது. 1. டெல்லி, இந்து கல்லூரியில்
2. டெல்லி, மிராண்டா ஹவுஸ்
3. டெல்லி, புனித ஸ்டீபன்ஸ் கல்லூரி 4. கொல்கத்தா, ராம கிருஷ்ணா மிஷன் விவேகானந்தா நூற்றாண்டு கல்லூரி
5. புது டெல்லி, ஆத்மா ராம் சனாதன் தர்ம் கல்லூரி
6. கொல்கத்தா, செயின்ட் சேவியர் கல்லூரி
7. கோயம்புத்தூர், PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி
8. சென்னை, லயோலா கல்லூரி
9. டெல்லி, கிரோரி மால் கல்லூரி
10. புது டெல்லி, லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரி
தமிழ்நாட்டில் சிறந்த 10 கல்லூரிகள் :
தேசிய அளவில் முதல் 100 இடங்கள் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 37 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
கோயம்புத்தூர், PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி - 7வது இடம்
சென்னை, லயோலா கல்லூரி - 8வது இடம் கோவை, PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி - 11வது இடம்
சென்னை, மாநில கல்லூரி - 13வது இடம்
சென்னை, மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி - 14வது இடம்
மதுரை, தியாகராஜர் கல்லூரி - 15வது இடம்
திருச்சி, புனித ஜோசப் கல்லூரி - 25வது இடம்
தூத்துக்குடி, வி.ஓ. சிதம்பரம் கல்லூரி - 28வது இடம்
சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி- 30வது இடம்
திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி - 33வது இடம்
சிறந்த கல்லூரிகள் பட்டியலில் தமிழ்நாடு :
பாளையங்கோட்டையில் உள்ள புனித சேவியர் கல்லூரி 36வது இடத்தையும், கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 37வது இடத்திலும், திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி 41வது இடத்திலும், மார்த்தாண்டத்தில் உள்ள நேசமோனி நினைவு கிறிஸ்தவ கல்லூரி 42 இடத்திலும் உள்ளது.
தொடர்ந்து, பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 44வது இடத்திலும், திருப்பத்தூரில் உள்ள சேக்ரட் ஹார்ட் கல்லூரி 47வது இடத்திலும், கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 52வது இடத்திலும், மதுரை அமெரிக்கன் கல்லூரி 54வது இடத்திலும் உள்ளது. கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 56வது இடத்திலும், திருச்சி ஜமால் முகமது கல்லூரி 59வது இடத்திலும், சிவகாசியில் உள்ள அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி 63வது இடத்திலும் உள்ளது.
சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரி மற்றும் கோவையில் உள்ள அரசு கலை கல்லூரி சேர்ந்து 67வது இடத்தில் உள்ளது. சென்னையில் உள்ள இராணி மேரிக் கல்லூரி 71வது இடத்திலும், சென்னையில் உள்ள சென்னை சமூகப் பணி பள்ளி 73வது இடத்திலும் உள்ளது.
மேலும், கோவை- டாக்டர். என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி 75வது இடத்திலும், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி 76வது இடத்திலும், தூத்துக்குடி - ஏ.பி.சி. மகாலக்ஷ்மி மகளிர் கல்லூரி 78வது இடத்திலும் உள்ளது.
79வது இடத்தில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி, 82வது இடத்தில் திருச்சி தேசிய கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து இடம்பெற்றுள்ளது.
89வது இடத்தில் சென்னை குருநானக் கல்லூரி, 94வது இடத்தில் டாக்டர் எஸ்.என்.எஸ்.ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 95வது இடத்தில் விருதுநகர் இந்து நாடார்கள் செந்திகுமார நாடார் கல்லூரி, 96வது இடத்தில் கும்பகோணம் அரசு கலை கல்லூரி, 98வது இடத்தில் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மற்றும் 100வது இடத்தில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.