SSA திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வரவேண்டிய 2,000 கோடி ரூபாய் நிதியை நிறுத்திய மத்திய அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 17, 2024

Comments:0

SSA திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வரவேண்டிய 2,000 கோடி ரூபாய் நிதியை நிறுத்திய மத்திய அரசு

IMG_20240717_172546


SSA திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வரவேண்டிய 2,000 கோடி ரூபாய் நிதியை நிறுத்திய மத்திய அரசு

எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வரவேண்டிய 2,000 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தியது. மத்திய அரசின் “பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு மறுத்ததால் ரூ .2,000 கோடி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளை ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து, புதிய கல்வி கொள்கையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பள்ளிகளை நடத்துவதே” பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டம் கொண்டுவரப்பட்டது. புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒன்றிய அரசு தொடங்கும் பள்ளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் “பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டத்தை ஏற்காததால் எஸ்.எஸ்.ஏ.விற்கு ஆண்டுதோறும் ஒதுக்கும் ரூ .2,000 கோடி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews