மாணவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறோம்: மக்களவையில் ராகுல் பேச்சு
நாடாளுமன்றத்துக்கு நீட் விவகாரம் முக்கியம் என்ற செய்தியை மாணவர்களுக்கு அனுப்ப விரும்புகிறோம் என்ற மக்களவையில் ராகுல் காந்தி திங்கள்கிழமை தெரிவித்தார். நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விசாரிக்க வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று காலை மீண்டும் மக்களவை கூடியவுடன் நீட் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர்.
அப்போது மக்களவையில் ராகுல் காந்தி பேசுகையில், “நாடாளுமன்றத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு செய்தி பரப்பப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கு நீட் விவகாரம் முக்கியம் என்ற செய்தியை மாணவர்கள் அனுப்ப விரும்புகிறோம். இந்த செய்தியை அனுப்ப நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார். தொடர்ந்து, ராகுல் காந்தியின் கோரிக்கைக்கு அரசுத் தரப்பில் மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “சில விதிகள் மற்றும் மரபுகளின்படி நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிறகுதான் எந்த விவாதமும் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.