School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.03.2024 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 07, 2024

Comments:0

School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.03.2024



School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.03.2024

திருக்குறள்:

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம் : வாழ்க்கை துணைநலம்

குறள்:373

தற்காத்துத் தற்கண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

விளக்கம்:

தன்னை காத்து தான் கொண்டவர்களை பாதுகாத்து தகுதிக்கு உதாரனமாய் வாய்ச்சொல் காத்து சோர்வில்லாமல் இருபவளே பெண். பழமொழி :

பெண் இன்றிப் பெருமையும் இல்லை :

கண் இன்றிக் காட்சியும் இல்லை .

There is no pride without a woman:

There is no sight without eyes.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2. இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பது தம் கடமை.

பொன்மொழி :

கையில் புத்தகத்துடன் இருக்கும் கல்வி கற்கும் பெண்களைக் கண்டு, அடக்குமுறையாளர்கள் பெரும் பயம் கொள்கிறார்கள். – மலாலா

பொது அறிவு :

1. இந்த ஆண்டிற்கான உலக மகளிர் நாள் கருப்பொருள் _________

விடை: பெண்களில் முதலீடு; முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துதல்

2. மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்

விடை: திருமதி பி. கீதா ஜீவன்

English words & meanings :

Women empowerment - பெண்கள் மேம்பாடு ஆரோக்ய வாழ்வு :

புதினா கீரை : புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். புதினா, வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றிப் போக்கு உள்பட பல வயிற்றுப் கோளாறுகளை தீர்த்து விடுகிறது.

மார்ச் 08

அனைத்துலக பெண்கள் நாள்

அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.[1] ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.[2] 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். நீதிக்கதை

இடுக்கண் களையும் நட்பு

அரசகுமாரனும் அவனுடைய உயிர் நண்பனும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார்கள். வெகுநேரம் அலைந்து திரிந்து வேட்டையாடியதால் அரச குமாரன் மிகவும் களைப்படைந்தான்.

"நண்பா, எனக்கு தூக்கம் வருகிறது. இம் மரத்தடியில் படுத்துத் தூங்குகிறேன்" என்றான் அரசகுமாரன். அரசகுமாரன் தூங்கும் போது நண்பன் அருகில் அமர்ந்து காவல் காத்தான். சிறிது நேரத்தில் அங்கே பெரியதொரு நாகப்பாம்பு வந்தது. 'புஸ்,புஸ்' என்று அது ஓசையிட்டபடியே அருகில் வந்ததும். நண்பன் இடையிலிருந்த வாளை ஓங்கினான்

உடனே நாகப்பாம்பு பேசியது. "இந்த குமாரன் போன ஜென்மத்தில் என்னுடைய எதிரியாக இருந்தான். ஆகவே அவனுடைய ரத்தத்தைக் குடித்தால்தான் என் மனம் ஆறும்" என்றது.

நண்பன், அரசகுமாரனின் உயிரைக் காக்க வேண்டியது தன்னுடைய கடமை என்பதை உணர்ந்தான். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தான். உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

"பாம்பே! அரசகுமாரனின் ரத்தம்தானே உனக்கு வேண்டும்? தந்தால் அதைக் குடித்துவிட்டு நீ போய் விடுவாயா?" என்று நண்பன் கேட்டதும் நாகப் பாம்பு அதற்கு சம்மதம் தெரிவித்தது.

உடனே, நண்பன் அரசகுமாரனின் கையில் தன்னுடைய வாளினால் காயம் ஏற்படுத்தினான். அருகில் இருந்த இலைகளைக் கொண்டு கிண்ணம் போல தயார் செய்தான். அந்தக் கிண்ணத்தில் அரசகுமாரனின் கையிலிருந்து கசிந்த ரத்தத்தை நிரப்பினான். அவன் அவ்வாறு செய்யும் போது அரசகுமாரன் லோசாகக் கண் விழித்துப் பார்த்துவிட்டு, உடனே மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தான். இலையால் ஆன கிண்ணம் நிறைய ரத்தம் சேர்ந்ததும் நண்பன், நாகப்பாம்புக்கு முன்னால் வைத்தான். பாம்பு ரத்தத்தைக் குடித்துவிட்டு, நண்பனுக்கு வாக்களித்தது போல அங்கிருந்து சென்று விட்டது.

நண்பன் மகிழ்ச்சியடைந்தவனாக, காட்டில் இருந்த பச்சிலைகளைக் கசக்கி சாறு பிழிந்து அரசகுமாரனின் கையில் ஏற்பட்ட காயத்தின் மீது தடவினான். சிறிது நேரத்தில் அரசகுமாரன் கண் விழித்தான் .

பிறகு இருவரும் காட்டில் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நண்பன், அரசகுமாரன் நடந்த விஷயத்தைப் பற்றித் தன்னிடம் எதுவும் கேட்க வில்லையே என்று எண்ணிக் கொண்டே இருந்தான்.

காட்டிலிருந்து அரண்மனைக்கு வந்து இரு தினங்கள் ஆன பிறகும் அரசகுமாரன் எதுவும் கேட்கவில்லையே என்று நண்பன் எண்ணினான்.

பிறகு நண்பனே, அரசகுமாரனிடம் கேட்டு

விட்டான். "அரசகுமாரா! அன்று காட்டில் நீ தூங்கும் வேளையில் உன் கையில் நான் காயம் ஏற்படுத்தினேன் அதை நீயும் பார்த்தாய், அதைப் பற்றி எதுவுமே என்னிடம் கேட்கவில்லையே" என்றான் நண்பன்.

"நண்பா! என் மீது நீ வைத்திருக்கும் அன்பும் நம்முடைய நட்பும் நான் அறியாததா? நீ எது செய்தாலும் என் நன்மைக்காகவே செய்வாய் என்று எனக்குத் தெரியும். அதனால் தான் நான் இதுபற்றி உன்னிடம் கேட்கவில்லை" என்றான் அரச குமாரன்.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. இன்றைய செய்திகள்

08.03.2024

*இந்தியாவில் கல்வியை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக அதிகம் செலவழிக்கின்றனர்- அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்.

*அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் நீட் பயிற்சி.

*சென்னை: திறப்பு விழாவிற்கு தயாராகும் யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம்.

*அவ்வையார் சிலைக்கு இன்று அமைச்சர்கள் மாலை அணிவிக்கிறார்கள்- தமிழக அரசு ஏற்பாடு.

*ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதலிடம்.

Today's Headlines

*India spends more on transport and fuel than on education – Shocking revelation after the analysis.

*NEET practice for government school students from March 25.

*Chennai: Yanakauni railway flyover getting ready for inauguration.

*Ministers will garland the statue of Avvaiyar today- Tamil Nadu Govt.

*Virat Kohli continues to top the ODI batsman rankings.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews