பள்ளிகளுக்கு அடுத்தடுத்து இமெயில் மூலம் வரும் வெடிகுண்டு மிரட்டல் !!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 05, 2024

Comments:0

பள்ளிகளுக்கு அடுத்தடுத்து இமெயில் மூலம் வரும் வெடிகுண்டு மிரட்டல் !!!





பள்ளிகளுக்கு அடுத்தடுத்து இமெயில் மூலம் வரும் வெடிகுண்டு மிரட்டல் !!!

பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்ற போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி 13 தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய்களுடன் பள்ளிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

எந்த ஒரு மர்ம பொருளோ வெடிகுண்டு தொடர்புடைய பொருளோ சிக்காததால் வதந்தி மற்றும் புரளியை கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்து தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர்க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்துதுப்புத்துலக்க தொடங்கினர்.

பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மெயில் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வந்திருப்பதும், உரிய அங்கீகாரம் இல்லாத ஐடியிலிருந்து வந்திருந்ததும் தெரியவந்ததால் மிரட்டல் விடுத்தவரை அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, குற்றவாளியை கைது செய்ய சர்வதேச போலீஸார் எனப்படும் இன்டர்போல் போலீஸாரின் உதவியும் நாடப்பட்டது. ஆனால், இதுவரை சாதகமான எந்த முடிவும் எட்டப்படவில்லை. மேலும், மிரட்டல் விடுத்த நபரின் ஐபி முகவரிபல்வேறு நாடுகளில் மாறி மாறிகாட்டுவதால் அந்தந்த ஐபிமுகவரிகளை வாங்கி சென்னைபோலீஸார் தீவிரமாக விசாரணைநடத்தி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போரூர் அடுத்த மாங்காடு அருகே உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

முன்னதாக, இந்த விவகாரம் போலவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களூருவில் 15-க்கும்மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடுக்கப்பட்டது.

இந்த இமெயில் விவரங்கள் குறித்து பெங்களூரு போலீஸார் கண்டுபிடித்த தகவலையும் பெற்று ஒரேநபர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் தொடர்ந்து இமெயில் மூலம் மிரட்டல் விடும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து வெடிகுண்டுமிரட்டல் தொடர்பான வழக்குகளையும் சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றலாமா என போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர் தமிழகத்தில் அடுத்தடுத்து பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. Bomb threats to famous schools in Tamil Nadu.

மின்னஞ்சலுக்கு வந்த பரபரப்பு கடிதம்!!

சென்னையில் மீண்டும் பதற்றம்...

பிரபல பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..! அலறவிட்ட ஈமெயில்.

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அடுத்த மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தனியார் பள்ளியில் தீவிர சோதனை.

கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் பத்ம சேஷாத்ரி பள்ளி(PSBB) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நிலையில் வடவள்ளி போலீசார் பள்ளிக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பள்ளியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசாரும் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் பரவிய நிலையில், பதற்றமடைந்த குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பள்ளி முன்பாக திரண்டு பதற்றத்துடன் குழந்தைகளை அழைத்து சென்றனர்.

மேலும் பள்ளி வாகனங்களில் வரும் குழந்தைகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதே போல் சென்னை பள்ளியிலும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews