‘கல்வி நிறுவனங்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள்’ யு.ஜி.சி. வழிகாட்டுதல்கள் வெளியீடு 'Development Schemes for Educational Institutions' UGC Publication of guidelines
பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) கீழ் நாடுமுழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், கல்வி சார்ந்த பணிகள் தொடர்பாக யு.ஜி.சி. பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், தேசிய கல்விக் கொள்கை-2020 அடிப்படையாக கொண்டு, உயர்கல்வி நிறுவனங்களுக்கான, ‘கல்வி நிறுவன மேம்பாட்டு திட்டங்கள்' அடங்கிய வழிகாட்டுதல்களை யு.ஜி.சி. நேற்று வெளியிட்டது.
இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தேசிய கல்விக்கொள்கை 2020 கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டு திட்டங்களுக்கு அங்கீகாரமும் வழங்குகிறது. கல்வி நிறுவனங்களில் மேம்பாட்டுக்கு தேவையான திட்டங்களையும் பரிந்துரை செய்கிறது. கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் பல்கலைக்கழக மானியக்குழுவின் www.ugc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பது, வெளிப்படையான நிர்வாகம், தேவைக்கு ஏற்பட வகுப்பறை அதிகரிப்பு, பேராசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் கல்வி நிறுனங்களை மேம்படுத்த முடியும். இதற்கான வழிகாட்டுதல்களை, கல்வி நிறுவனங்கள், தங்களின் வாரிய உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசித்து, தங்களின் நிறுவனங்களில் அதற்கான திட்டங்களை செயல்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.