திட்டமிட்டபடி நாளை(ஜன.15) பள்ளிகள் திறக்கப்படும்: கல்வித்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 14, 2024

Comments:0

திட்டமிட்டபடி நாளை(ஜன.15) பள்ளிகள் திறக்கப்படும்: கல்வித்துறை

திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: கல்வித்துறை

தில்லியில் திட்டமிட்டபடி அனைத்து பள்ளிகளும் நாளை(ஜன.15) திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் தில்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடும் குளிரை கருத்தில்கொண்டு மழலையர் பள்ளிகள் முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 12ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விடுமுறை முடிந்த நிலையில் தில்லியில் திட்டமிட்டபடி அனைத்து பள்ளிகளும் நாளை(ஜன.15) திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. காலை 9 மணிக்கு முன் பள்ளிகளை திறக்கவோ, 5 மணிக்கு மேல் பள்ளிகளை இயக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 3 ஆகக் குறைந்ததால் கடுமையான குளிர் தொடர்ந்து நீடித்தது. இதனிடையே ஜனவரி 20-ம் தேதி வரை நகரத்தில் அடர்ந்த மூடுபனி காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews