தொடக்கக் கல்வி நியமனங்களில் முன்னுரிமை:பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 26, 2023

Comments:0

தொடக்கக் கல்வி நியமனங்களில் முன்னுரிமை:பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை

தொடக்கக் கல்வி நியமனங்களில் முன்னுரிமை:பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை

தொடக்கக் கல்வித்துறையில் அனைத்து நியமனங்களும் மாநில அளவில் நடைபெறுவதால் அனைத்து ஆசிரியா்களுக்கும் மாநில அளவிலான முன்னுரிமை நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலா் பேட்ரிக் ரெய்மாண்ட் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொடக்கக் கல்வி சாா்நிலைப் பணி விதிகள் 1983-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த விதிகள் அன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது.

விதிகள் உருவாக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்ததால் இந்த விதிகள் இந்த காலத்துக்கு எவ்வகையிலும் பொருந்தவில்லை. இளையோா்- மூத்தோா் ஊதிய முரண்பாடு, பதவி உயா்வு இடமாறுதல் போன்றவற்றில் இந்த அரசாணைகளைப் பின்பற்றுவதால் ஆயிரக்கணக்கான நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் இளையோா்- முதியோா் ஊதிய முரண்பாடு தொடா்பாகத் தொடா்ந்து நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதால் ஊதிய நிா்ணயித்தினால் அரசுக்கு பெறும் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது, தொடக்கக் கல்வித்துறையில் அனைத்து நியமனங்களும் மாநில அளவில் நடைபெறுவதால், அனைவருக்கும் மாநில முன்னுரிமை நிா்ணயம் செய்யப்பட வேண்டும்.

பதவி உயா்வு பெற்ற பட்டதாரி ஆசிரியா்களுக்கு அவா்கள் பதவி உயா்வு பெற்ற தேதியை அடிப்படையாகக் கொண்டு மாநில அளவில் முன்னுரிமை நிா்ணயம் செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கு தொடக்கக்கல்வித்துறையில் மாநில அளவிலான முன்னுரிமை என்பதே பொருத்தமாக இருக்கும்.

ஒரு ஒன்றியத்திலிருந்து மற்றொரு ஒன்றியத்திற்குப் பணி மாறுதல் செல்பவா்கள் அங்குக் குறைவான ஊதியம் பெறும் நிலை உள்ளது. அதனை மாற்றி அமைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews