Breaking

Wednesday, December 06, 2023

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கல்வி அமைச்சருக்கு கோரிக்கை

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - திண்டிவனம் எம்.எல்.ஏ., கல்வி அமைச்சருக்கு கோரிக்கை

பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று திண்டிவனம் எம்.எல்.ஏ., அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன், பிரம்மசேதத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். பள்ளியில் 1063 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என 20 பணியிடங்கள் மற்றும் ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட 4 பணியிடங்களும் காலியாக உள்ளதாக, பள்ளியின் தலைமையாசிரியர் எம்.எல்.ஏ.,விடம் தெரிவித்தார்.இதை தொடர்ந்து பள்ளியிலிருந்தே எம்.எல்.ஏ., கல்வித்துறை அமைச்சர் மகேஷிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பிரம்மசேதம் அரசு பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தார். அமைச்சரும் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog