அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - சென்னை பெருநகர போக்குவரத்து காவல் - செய்தி வெளியீடு - 09.10.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 09, 2023

Comments:0

அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - சென்னை பெருநகர போக்குவரத்து காவல் - செய்தி வெளியீடு - 09.10.2023

Anna%20Road%20Traffic%20Change%20from%20Tomorrow%20-%20Chennai%20Metropolitan%20Traffic%20Police%20-%20Press%20Release%20-%2009.10.2023


Anna Road Traffic Change from Tomorrow - Chennai Metropolitan Traffic Police - Press Release - 09.10.2023 - அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - சென்னை பெருநகர போக்குவரத்து காவல் - செய்தி வெளியீடு - 09.10.2023

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்

செய்தி வெளியீடு எண்.37/10/2023 - பத்திரிகைச் செய்தி - 09.10.2023

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்ல வேண்டி கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. நாளை 10.10.2023 முதல் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.* 1.ஸ்மித் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணா சாலை x ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்லலாம். ஒயிட்ஸ் சாலை x ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதி இல்லை

2. பட்டுள்ளாஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. ஒயிட்ஸ் சாலை x பட்டுள்ளாஸ் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்லலாம். அண்ணா சாலை x பட்டுள்ளாஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்ல அனுமதி இல்லை.

3. ஜி.பி.ரோடு சந்திப்பு மற்றும் பின்னி சாலையில் இருந்து அண்ணாசாலை வந்து ஒயிட்ஸ் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக ஸ்மித் ரோடு சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி ஸ்மித் ரோடு, ஒயிட்ஸ் ரோடு சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

4.இராயப்பேட்டை மணிகூண்டு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை. 5.திரு.வி.க. x ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக பட்டுல்லாஸ் சாலை சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் அடையலாம். சாலை. அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்

6. அண்ணாசாலை X பட்டுள்ளாஸ் சாலை சந்திப்பில் இருந்து பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி அண்ணாசாலையில் ஸ்பென்சர் எதிர்புறம் உள்ளே U வளைவில் திரும்பி பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லலாம்.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

IMG_20231009_201736

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84603077