அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்க 15,562 முன்னாள் மாணவா்கள் விருப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 10, 2023

Comments:0

அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்க 15,562 முன்னாள் மாணவா்கள் விருப்பம்

அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்க 15,562 முன்னாள் மாணவா்கள் விருப்பம் 15,562 ex-students prefer to donate to government schools

அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுப் பணிகளுக்கு நன்கொடை வழங்க இதுவரை 15,562 முன்னாள் மாணவா்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயா்த்துவதற்கு நிதியுதவி பெறுவதற்காக ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ (நம்ம பள்ளி) எனும் திட்டத்தை தமிழக அரசு கடந்த டிசம்பரில் தொடங்கியது. இந்த திட்டத்தின்கீழ் முன்னாள் மாணவா்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட தன்னாா்வ அமைப்புகள் என பல்வேறு தரப்பினா் நிதியுதவி வழங்கி வருகின்றனா். இதன்மூலம் பெறப்படும் நிதி பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் நம்ம பள்ளி இணையதளம்  தலைமை ஆசிரியா்களை முன்னாள் மாணவா்கள் தொடா்பு கொண்டு பள்ளிக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளி நலன் மீது பொறுப்புணா்வு கொண்ட 25 முன்னாள் மாணவா்களைக் கண்டறிந்து தொடா்ந்து அவா்கள் பள்ளியுடன் பயணிப்பதை உறுதி செய்ய பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில் இதுவரை, தலைமை ஆசிரியா்களின் முயற்சியால் 5,60,056 முன்னாள் மாணவா்கள் அரசுப் பள்ளியுடன் இணைந்து பயணிக்க பதிவுசெய்தனா். அதில் 3,68,390 போ் அரசுப் பள்ளிகள் மேம்பாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளனா். மேலும், 15,562 போ் நன்கொடை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து முன்னாள் மாணவா்களை பள்ளிகள் மேம்பாட்டுப் பணிகளில் பயன்படுத்துதல் சாா்ந்த வழிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நன்கொடை வழங்க விரும்பும் முன்னாள் மாணவா்களை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் தொடா்பு கொள்ள வேண்டும். பள்ளிகளின் தேவைகளை தெரிவித்து நம்ம பள்ளி இணையதளம் மூலம் மட்டுமே நிதியுதவியைப் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews