முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு சேர செப்.25 முதல் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 22, 2023

Comments:0

முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு சேர செப்.25 முதல் விண்ணப்பிக்கலாம்

*முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு சேர விரும்புவோர், செப்.25 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.*

இது தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (எம்.எட்.,) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை செப்.25 முதல் செப்.30 வரை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பம் பதிவு செய்ய ஒவ்வொரு கல்லூரிக்கும், விண்ணப்பக் கட்டணம் ரூ.58 மற்றும் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ.2/. மொத்தம் ரூ.60/.   (ரூபாய் .அறுபது மட்டும்) செலுத்தப்படவேண்டும்.

SC/SCA/ ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவுக்கட்டணம் ரூ.2/- (ரூபாய் இரண்டு மட்டும்) செலுத்தினால் போதுமானது.

மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம்.

இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “ The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் 25.09.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவர்கள் 93634 - 62070, 93634 - 62007, 93634 - 62042, 93634 - 62024 என்ற தொடர்பு எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews