வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 03, 2023

Comments:0

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு

வட்டார கல்வி அலுவலர் B.E.O. தேர்வு எழுத ஏற்பாடு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஜூனில் 33 வட்டார கல்வி அலுவலர்(பி.இ.ஓ.,) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பி.எட்., முடித்த பட்டதாரிகள் ஜூலை 5 வரை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பி.இ.ஓ., பணிக்கான தேர்வு செப்.,10ல் நடக்கிறது. தேனியில் நாடார் சரஸ்வதி ஆண்கள் பள்ளியில் 381 பேர், நாடார் சரஸ்வதி பெண்கள் பள்ளியில் 400 என மொத்தம் 781 பேர் தேர்வு எழுத உள்ளனர்

*வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு.

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 



தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்தத் தேர்வுகளை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.  முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம்  வெளியிட்ட 2023-ஆம் ஆண்டுக்கான ஆண்டு அட்டவணையில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை ஜனவரி மாதம்  வெளியிடப்படும்;

வட்டாரக் கல்வி அலுவலர்கள் 23 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

மேலும் 6,553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிக்கை மார்ச் மாதமும் வெளியிடப்படும்.

பட்டதாரி ஆசிரியர்கள்  3,587 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை ஏப்ரல் மாதமும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை மே மாதமும் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.

*ஜூன் மாதம் வெளியான அறிவிப்பு.*

மே மாதம் முடிந்து ஜூன் தொடங்கிய பிறகும், எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து,  தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான நேரடித் தேர்வுக்கு ஜூன் 5ஆம் தேதி முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. செப்டம்பர் 10ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து தேர்வர்கள்  https://www.trb.tn.gov.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, வட்டார கல்வி அலுவலர் பணிக்கான  தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

நேரடி நியமனமாக உள்ள இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் ஜூலை ஜூலை 12ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
*42,712 தேர்வர்கள்‌ விண்ணப்பம்.*

இதுகுறித்து ஆசிரியர்‌ தேர்வு வாரியம் கூறும்போது, ‘’கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, 2019 - 2020 முதல் 2021 - 2022 வரையிலான ஆண்டிற்கான வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ காலிப் பணியிடங்களுக்கான பணித்தெரிவு தொடர்பான தேர்வு வரும் 10.09.2023 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 42,712 தேர்வர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌.

விண்ணப்பத்த தேர்வர்களுக்கு நுழைவுச்‌ சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளமான  https://www.trb.tn.gov.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் User id மற்றும் Password ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்வதில்‌ ஏற்படும்‌ கடைசி நேர பதற்றத்தைத்‌ தவிர்க்கும்‌ பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, தேர்வர்கள்‌ தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டும்’’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வர்கள்  https://trb1.ucanapply.com/login  என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews