சான்றிதழில் ஆதார் எண் கூடாது: பல்கலைக்கழக மான்யக்குழு அறிவிப்பு.
பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில், மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு பல்கலைகளுக்கு அனுமதி இல்லை' என, யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பின் போது ஆவண சரிபார்ப்புக்கு வசதியாக, பல்கலைகளால் வழங்கப்படும் தற்காலிக சான்றிதழ்கள் மற்றும் பட்டங்களில், முழு ஆதார் எண்களை அச்சிடுவது குறித்து, மாநில அரசுகள் பரிசீலித்து வருவதாக, செய்தி வெளியானது.
இந்நிலையில் யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜோஷி, அனைத்து பல்கலைகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில், மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு பல்கலைகளுக்கு அனுமதி இல்லை.
ஆதார் விதிகள், ஒழுங்குமுறைகளை, உயர்கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கல்லூரிகளில் படிப்பை முடித்த மாணவர்களுக்கான பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி இல்லை என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு சில மாநில அரசுகள் பரிசீலனை செய்வதாக தகவல் வெளியான நிலையில், யுஜிசி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி பல்கலைக்கழகங்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்கள் ஆதார் ஆணைய விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.