MBBS வகுப்புகள் செப்.1-இல் தொடக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 28, 2023

Comments:0

MBBS வகுப்புகள் செப்.1-இல் தொடக்கம்!



MBBS வகுப்புகள் செப்.1-இல் தொடக்கம்!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் செப். 1-ஆம் தேதி தொடங்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

அதற்குள்ளாக கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறைவு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் நிகழாண்டு மருத்துவப் படிப்புக்கான நீட் தோவில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் தோச்சி பெற்றனா். தமிழகத்தில் 78,693 போ தோச்சியடைந்தனா். தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் 6,326 எம்பிபிஎஸ் இடங்களும், 1,768 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டில் 1,509 எம்பிபிஎஸ் மற்றும் 395 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது. இந்தமுறை 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 606 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் வகுப்புகளை செப்.

1-ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ப அகில இந்திய கலந்தாய்வுக்கான திட்ட அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. கலந்தாய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை தினங்களை வேலை நாள்களாகவே கருதி பணியாற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்று வரும் அதேவேளையில், தமிழகத்திலும் கலந்தாய்வு தொடங்கப்பட்டுள்ளது. வகுப்புகள் தொடங்க இன்னமும் ஒரு மாதத்துக்கும் மேல் அவகாசம் இருப்பதால், அதற்குள்ளாக மாநில இடங்களுக்கான மாணவா் சோக்கை முழுவதும் நிறைவடைந்துவிடும். எனவே, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்த தேதியில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகளைத் தொடங்க தமிழகம் தயாராக உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews