மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது?- அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 16, 2023

Comments:0

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது?- அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது?- அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு அடிப்படையில் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் வெளியிட்டார். மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்களையும், அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கான பட்டியலையும் அமைச்சர் வெளியிட்டார். தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டில் 6,326 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,768 பல் மருத்துவ இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா 596 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பதாக தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் மங்கரை அரசு பள்ளி மாணவன் பச்சையப்பன் 565 மதிப்பெண்களுடன் 2-ம் இடமும், காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவன் முருகன் 560 மதிப்பெண்களுடன் 3வது இடமும் பிடித்துள்ளனர்.

பொதுகலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். சென்னையை சேர்ந்த சூர்யா சித்தார்த், சேலத்தை சேர்ந்த வருண் ஆகியோர் தலா 715 மதிப்பெண்களுடன் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். மேலும், அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் தமிழ்நாடு மாணவ, மாணவிகள் 5 பேர் இடம்பிடித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்தாண்டு 36,206 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 16 ந் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் சுற்று கலந்தாய்வை மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு ஜூலை 20 ந் தேதி முதல் ஆகஸ்ட் 6 ந் தேதி வரையில் நடத்துகிறது.
இந்த நிலையில் தேசிய மாணவர் சேர்க்கைக் குழுவின் வழிகாட்டுதல்படி ஜூலை 22-ம் தேதி முதல் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் நடத்தப்பட உள்ளது.

நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கு போதுமான அளவில் கால அவகாசம் இல்லாததால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் நாட்களிலேயே தமிழ்நாட்டில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இணையம் வாயிலாகவும் கலந்தாய்வு நடைபெறுகிறது. மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை மையங்கள் வாயிலாகவும் வீட்டிலிருந்தும் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகளில் 5,050 இடங்களும், கே கே நகர் இஎஸ் ஐ மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்கள் உள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews