கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் நாளை போராட்டம்: ஆசிரியர்கள் இயக்கம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 27, 2023

Comments:0

கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் நாளை போராட்டம்: ஆசிரியர்கள் இயக்கம் அறிவிப்பு

பேச்சு தோல்வி: டிபிஐ வளாகத்தில் நாளை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்



தமிழக பள்ளிக்கல்வி துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, டி.என்.எஸ்.இ., ஜாக்டோ சார்பில், நாளை டி.பி.ஐ., வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை கைவிடுமாறு, பள்ளிக்கல்வி துறை சார்பில், இயக்குனர் அறிவொளி தலைமையிலான அதிகாரிகள் குழு, நேற்று கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தியது. சங்க நிர்வாகிகள் மாயவன், சங்கர், பேட்ரிக் ரைமண்ட், ஆரோக்கியதாஸ், சங்கரபெருமாள், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து, இயக்குனரிடம் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். இது குறித்து, அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, சங்க நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார். இதையடுத்து, 'கோரிக்கை நிறைவேறாவிட்டால் போராட்டம் தீவிரமாகும். நாளை ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடக்கும்' எனக்கூறி, ஆசிரியர் சங்கத்தினர் கூட்டத்தை முடித்துக் கொண்டனர். இந்த போராட்டத்தில், பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பும் பங்கேற்கும் என, ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிவித்து உள்ளார். ஆசிரியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை ஏற்க இயலாத நிலையில் பள்ளிக்கல்வித்துறை இருப்பதால், நாளை போரட்டம் நடக்கும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் விடுத்த கோரிக்கையின் பேரில் பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் கூட்டமைப்புடன் டிபிஐ வளாகத்தில் நேற்று முன்தினம் பேச்சு வார்த்தை நடந்தது.

அதில் மேற்கண்ட கூட்டமைப்பில் உள்ள 22 சங்கங்கள் பங்கேற்றன. இதையடுத்து,

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்புடன் நேற்று பேச்சு நடந்தது. கூட்டத்துக்கு பிறகு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறியதாவது: எங்களின் பிரதான கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை ஏற்க இயலாத நிலையில் இருப்பதால் நாங்கள் திட்டமிட்டபடி நாளை(28ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது சாத்தியமில்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews