10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 28ம்தேதி போராட்டம் - ஜாக்டோ அமைப்பு முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 10, 2023

Comments:0

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 28ம்தேதி போராட்டம் - ஜாக்டோ அமைப்பு முடிவு

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 28ம்தேதி போராட்டம் - ஜாக்டோ அமைப்பு முடிவு

திருச்சியில் இடைநிலைக்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்குப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களி டம் கூறுகையில், 'தமிழ கத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றாக இணைந்து பள்ளிக் கல்வித்துறை ஜாக்டோ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம். பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

ஆசிரியர்களின் ஈட்டிய விடுப்பு சரண் செய்து ஊதியம் பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும். முதன்னாள் முதல்வர் அண்ணாவால் வழங்கப்பட்டு, மீண்டும் பறிக்கப்பட்ட உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியத்தை உடனடியாக மீண்டும் வழங்கு வேண்டும்

தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ தமிழகத்தில் அமல்படுத்தும் வகையில் பதவி உயர்வுக்கு தகுதிதேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறியதை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி ஜாக்டோ அமைப்பின் சார்பில், ஜூலை 28ம் தேதி 2 ஆயிரம் ஆசிரியர் களை ஒருங்கிணைத்து சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும். தமிழக முதல்வர் தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து மாவட்ட அள விலும், பின்னர் வேலை நிறுத்தப் போராட்டம் அடுத்தடுத்தக் கட்டமாக நடத்தப்படும்.

பள்ளிக ளில் குழு ஆய்வு (டீம் விசிட்) திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews