இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல்: தமிழக அரசு புதிய முடிவு - Engineering Rank List: Tamil Nadu Govt New Result
இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசைக்கு, 10ம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கில் கொள்வதை தவிர்க்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., -- பி.டெக்., முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, ஜூலையில், 'ஆன்லைன்' வழி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்ததும், பிளஸ் 2 பொது தேர்வில், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி அறிவியல் இணைந்த, 'கட் ஆப்'மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களுக்கு தரவரிசை வழங்கப்பட உள்ளது.
இதில், சமமான மதிப்பெண் பெற்றவர்களுக்கு, பிளஸ் 2 மொத்த மதிப்பெண் மற்றும், 10ம் வகுப்பு மொத்த மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை வழங்கப்படும்.
இந்த மதிப்பெண்ணும் சமமாக இருந்தால், பிறந்த தேதியில் மூத்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.