பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம்: அண்ணா பல்கலை. உத்தரவு Appointment of Tamil Teachers in Engineering Colleges: Anna University. order
பொறியியல் கல்லூரிகளில் உரிய கல்வித் தகுதியுடன் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இணைப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) பி.சக்திவேல் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழக பாடத்திட்டத்தின்படி, பி.இ. பி.டெக். மாணவர்களுக்கு முதல் பருவத்தில் தமிழர் மரபு, 2-ம் பருவத்தில் தமிழரும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்களை இன்னும் நியமிக்காமல் இருந்தால், உடனே நியமிக்க வேண்டும். அவர்களது கல்வித் தகுதி குறைந்தபட்சம் எம்.ஏ. எம்.ஃபில். படிப்புடன் ‘ஸ்லெட்’ அல்லது ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தங்கள் கல்லூரியில் ஏற்கெனவே தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தால், அவர்களது பெயர், கல்வித் தகுதி, நியமிக்கப்பட்ட நாள் உள்ளிட்ட விவரங்களை பல்கலைக்கழகத்துக்கும், அதன் நகலை மண்டல அலுவலருக்கும் அனுப்ப வேண்டும். மேற்கண்ட விவரங்கள் ஜூன் 12-ம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.