வருமான வரி தாக்கலுக்கு முன் ஃபார்ம் 16ல் சரிபார்க்க வேண்டியவைகள்...! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 29, 2023

Comments:0

வருமான வரி தாக்கலுக்கு முன் ஃபார்ம் 16ல் சரிபார்க்க வேண்டியவைகள்...!

வருமான வரி தாக்கலுக்கு முன் ஃபார்ம் 16ல் சரிபார்க்க வேண்டியவைகள்...!

2022 - 23 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2023. தற்போது வருமான வரித்துறை ஐடி ரிட்டர்னுக்கான ஐடிஆர் 1 மற்றும் 4 ஆன்லைன் படிவங்களை வழங்கியுள்ளது.

ஐடி தாக்கலுக்கு முன்பு சம்பளதாரர்கள் ஃபார்ம் 16ல் சரிபார்க்க வேண்டியவைகள் குறித்து காண்போம்.அதற்கு முன்னதாக செயல்பாட்டில் உள்ள இந்த ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 படிவம் குறித்தும் பார்த்துவிடுவோம்.

ஐடிஆர்-1 சம்பளதாரர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உட்பட தனிநபர்களுக்குப் பொருந்தும். மேலும், இதர வருமானங்களுக்காக வரி செலுத்துவோரும் ஐடிஆர்-1 படிவத்தைப் பயன்படுத்தி வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம்.

அதே போல் ஐடிஆர் 4 படிவத்தைக் கொண்டு மொத்த வருமானம் ரூ 50 லட்சம் வரை உள்ள நிறுவனங்கள், தனிநபர்கள், ஹிந்து கூட்டுக் குடும்பங்கள் ஆகியோர் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம்.ஃபார்ம் 16ஃபார்ம் 16 என்பது உங்களது நிறுவனம் அரசுக்கு வருமான வரி தாக்கல் செய்ததற்கான ஆதாரம்.

இப்படிவம் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 அல்லது அதற்கு முன் நிறுவனத்தால் வழங்கப்படும். உதாரணமாக, உங்கள் வருமானம், வரி விலக்கு வரம்பை விட அதிகமாக இருந்தால், நிறுவனம் உங்கள் சம்பளத்தில் வருமான வரியை கழித்து அதை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பார்.

ஃபார்ம் 16 பகுதி ஏ மற்றும் பகுதி பி என இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கும்.

பகுதி ஏ-யில் பான் (PAN), டான் (TAN) எண் விவரங்கள், பெயர், முகவரி, டிடிஎஸ் பிடித்தம் மற்றும் ஊழியர், நிறுவனம் பற்றிய இதர தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.அதே போல் பகுதி பியில் வருமானம், பிடித்தங்கள், சம்பள விவரங்கள், செலுத்த வேண்டிய வரி மற்றும் பல விவரங்கள் உள்ளடங்கியிருக்கும். ஃபார்ம் 16ல் சரிபார்க்க வேண்டியவைஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு ஃபார்ம் 16ல் உள்ள தகவல்களை உங்களது சம்பள ஸ்லிப்புடம் ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள். மேலும் ஆண்டு தகவல் அறிக்கை, மற்றும் படிவம் 26ஏஎஸ் ஆகியவற்றுடன் சரிபார்க்க வேண்டும்.

இது அரசிடம் இருக்கும் தகவலும், வரி செலுத்துவோர் வைத்திருக்கும் தரவுகளுடன் ஒத்துப் போவதை உறுதிசெய்யும்.மேலும் முக்கியமாக உங்களது பான் எண்ணைச் சரிபார்க்க வேண்டும். அதுவும் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதும் பொருந்த வேண்டும்.

பான் தவறாக இருந்தால், சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வரி படிவம் 26ASல் காட்டப்படாது. ஃபார்ம் 16ல் பி பிரிவில் உள்ள சம்பளம், வரி விலக்கு கொண்ட அலவன்ஸ்கள் ஆகியவற்றை சம்பள ஸ்லிப்புகளுடன் சோதனை செய்யுங்கள். வரி விலக்கு அலவன்ஸ்கள் கணக்கீடுகளை விட குறைவாக இருந்தால், அத்தகைய முரண்பாட்டை நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

வேலை மாறியிருந்தால்...2022-23 நிதியாண்டில் நீங்கள் வேலை மாறியிருந்தால், இரு நிறுவனங்களிடமிருந்தும் படிவம் 16ஐப் பெறுவது முக்கியம். இது துல்லியமான அறிக்கையை உறுதிப்படுத்த உதவும். மிக முக்கியமாக, முந்தைய நிறுவனத்தின் மூலம் சம்பாதித்த வருமானத்தைப் பற்றி தற்போதைய நிறுவனத்திடம் தெரிவிக்கவில்லை என்றால், வேலை மாற்றம் காரணமாக கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews