UKG குழந்தையை ஃபெயிலாக்கி விமரிசனத்துக்குள்ளான தனியார் பள்ளி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 10, 2023

Comments:0

UKG குழந்தையை ஃபெயிலாக்கி விமரிசனத்துக்குள்ளான தனியார் பள்ளி

UKG குழந்தையை ஃபெயிலாக்கி விமரிசனத்துக்குள்ளான தனியார் பள்ளி UKG is a private school under scrutiny for failing a child

பெங்களூரு: ஆறு வயதே ஆன யுகேஜி குழந்தை இந்த ஆண்டு ஃபெயிலானதாக, பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளி கடுமையான விமரிசனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

அனேகலில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்று, தனது பள்ளியல் யுகேஜி பயிலும் குழந்தையை ஃபெயில் என்று அறிவித்து, அடுத்த கல்வியாண்டிலும் யுகேஜி படிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

இது குறித்து அந்த குழந்தையின் தந்தை பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமையிடம் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை. ஒரு குழந்தைக்காக தங்களது நடைமுறையை மாற்ற முடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறிவிட்டதாக தந்தை மனோஜ் பாதல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரோ, குழந்தையை ஃபெயிலாக்குவதன் மூலம், அது வருங்காலத்தில் கல்வியில் உரிய முறையில் ஆர்வம் செலுத்தி படிக்க வழி பிறக்கும் என்று கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தனது குழந்தை இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் என்றும், அதனால் இந்த சிக்கலைப் புரிந்துகொள்ளவே முடியாது என்றும் தந்தை கவலை தெரிவிக்கிறார்.

இது குறித்த டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி, முன்னாள் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். யுகேஜி மாணவி, 160 மதிப்பெண்ணுக்கு 100 மதிப்பெண்கள் எடுத்திருப்பதால் அவர் ஃபெயில் என்று எழுதிக் கொடுத்த தாளையும் டிவிட்டரில் இணைத்துள்ளார்.



தகவல் பரவிய நிலையில், கல்வித்துறை சார்பில் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews