உலககோப்பை கால்பந்து போட்டியை பார்க்க இலவச டேட்டா தருவதாக சமூக வலைதளங்களில் போலி பதிவுகள் - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
22-வது உலககோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடை பெற்று வருகிறது. பிரான்ஸ், பிரேசில், அர்ஜென்டினா, இங் கிலாந்து, போர்ச்சுகல், அமெரிக்கா, உருகுவே, நெதர்லாந்து உள்ளிட்ட 32 நாடுகள் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளன.
இந்த நிலையில் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவ லைதளங்களில் கடந்த சில நாட்களாக உலககோப்பை கால் பந்து போட்டி தொடர்பாக பதிவு மற்றும் இணைப்பு பகிரப் பட்டு வருகிறது. அதில், உலகமெங்கும் உள்ள மக்களுக்கு 2022 கார்டெல் உலக கோப்பையை பார்க்க 50 ஜி.பி.டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. நான் என்னுடையதை பெற்றேன். நீங்களும் அதனை பெறுவதற்கு இதனை திறக்கவும் என்று ஒரு இணையதளத்தின் இணைப்பு குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை உண்மை என்று நம்பி பலர் அந்த இணைப்பிற்கு சென்று இலவசமாக 50 ஜி.பி. டேட்டா பெற முயன்றனர். ஆனால் அனைவரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகினர்.
இதுதொடர்பாக வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீ சார் கூறுகையில், உலககோப்பை கால்பந்து போட்டி இலவச டேட்டா தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் பதிவு மற்றும் இணைப்பு போலியானது. 50 ஜி.பி. டேட்டா தருவதாக கூறும் ஆசைவார்த்தைகளை நம்பி எந்த இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள். அவ்வாறு செய்தால் உங்கள் செல் போன் முடக்கப்பட (ஹேக்) வாய்ப்புள்ளது. சைபர் குற்றம் தொடர்பாக 1930 என்ற எண்ணிற்கு உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.