பணிச்சுமையினால் ஆசிரியை மரணம் - அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிநிலையில் உரிய பாதுகாப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 01, 2022

Comments:0

பணிச்சுமையினால் ஆசிரியை மரணம் - அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிநிலையில் உரிய பாதுகாப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

பணிச்சுமையினால் ஏற்பட்ட மன உலைச்சல் காரணமாக மரணமடைந்த ஆசிரியை ஆயிஷா அவர்களின் மரணத்தை தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிநிலையில் உரிய பாதுகாப்பு வழங்க கோரி விழுப்புரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாள் : 08-11-2022 செவ்வாய்க்கிழமை, மாலை 5.00 மணி

இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, விழுப்புரம்.

தலைமை: திரு.கோ.சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் :

வரவேற்பு

திரு. ப.முத்துக்குமரன், மாவட்ட துணை செயலாளர்

கோரிக்கை உரை : திரு. இரா. குமார், மாவட்ட செயலாளர் மற்றும் வட்டார, மாவட்ட, மாநில பொருப்பாளர்கள்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் பணப்பாக்கம் தொடக்கப்பள்ளி ஆசிரியை அருமை சகோதரி திருமதி. M.ஆயிஷா அவர்களின் அகால மரணச் செய்தி நம்மிடையே மிகுந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களில் ஆசிரியர்களிடையே விரக்தியும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக வருகின்ற செய்திகள் அதிர்ச்சியினை உருவாக்குகின்றன அருமைச்சகோதரி திருமதி. M.ஆயிஷா அவர்களின் மரணம் அம்மையாரின் குடும்பத்திற்கு மிகுந்த இழப்பினை ஏற்படுத்தியுள்ளது அம்மையாரின் மறைவிற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

திருமதி. M.ஆயிஷா அவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கிடவும் இதுபோன்ற துயர நிகழ்வுகள் வருங்காலத்தில் ஏற்படாவண்ணம் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிநிலையில் உரிய பாதுகாப்பும் நம்பிக்கை ஏற்பட மனநல பயிற்சியும் வழங்கிடக்கோரி நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துகொண்டு வெற்றி அடையச் செய்திட வேண்டுகிறோம்.

நன்றியுரை : இர.பொன்னுசாமி மாவட்ட பொருளாளர்

இவண், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

விழுப்புரம் மாவட்டம் (கிளை)
IMG_20221101_194735

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84606983