புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற நவம்பர் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 28, 2022

Comments:0

புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற நவம்பர் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு தகவல்

புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற நவம்பர் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு தகவல்

புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற நவம்பர் 1-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள், மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:

புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற நவம்பர் 1-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு முதலமைச்சர் 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு/தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைபெண் திட்டம் துவங்கப்பட்டது.

இதுவரை 2,3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். தற்போது இவ்வலைதளத்தில் http://www.pudhumaipenn.tn.gov.in முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இவ்வலைத்தளத்தில், மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பதிவு செய்யலாம்.

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள், மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிவரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2,3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளிவரை, காலை 10 மணி முதல் 5 மணி வரை -9150056809, 9150056805, 9150056801 மற்றும் 9150056810 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேல்படிப்பு / தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் 11.11.2022 க்குள் தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews