ஐடி ரிட்டன் தாக்கலுக்கு கடைசி தேதியை தவறவிட்டாச்சா?அடுத்து என்ன செய்வது? சட்ட நடவடிக்கை வருமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 01, 2022

Comments:0

ஐடி ரிட்டன் தாக்கலுக்கு கடைசி தேதியை தவறவிட்டாச்சா?அடுத்து என்ன செய்வது? சட்ட நடவடிக்கை வருமா?

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசித் தேதியாகும். இதற்கு மேல் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக் காலக்கெடுவைத் தவறவிட்டவர்கள் அடுத்து என்ன செய்வது.

வருமானவரி ரிட்டன் 2021-22ம் ஆண்டுக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசித் தேதியாகும். இதன்படி நேற்று இரவு 10 மணிவரை ஏறக்குறைய 65 லட்சம் பேர் ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 5 கோடி பேர் ரிட்டன் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் காலக்கெடுவை தவறவிட்டவர்கள் என்ன செய்ய முடியும். சட்ட நடவடிக்கையை எவ்வாறு தவிர்க்கலாம்.

வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய கடைசித் தேதியை தவறவிட்டவர்கள் அச்சப்படவோ, பதற்றப்படவோ தேவையில்லை. அவர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் 31ம்தேதிவரை கால அவகாசம் இருக்கிறது.

இதற்கு தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்யும் பிரிவில் ரிட்டன் தாக்கல் செய்யலாம். இந்த முறையில் தாக்கல் செய்பவர்கள் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும்.

ஆண்டுக்கு ரூ.5லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் வருமானவரிச் சட்டம் 243(எப்) பிரிவில் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டியிருந்துத. ஆனால், பட்ஜெட்டில் இந்த அபராதத்தை ரூ.5 ஆயிரமாக மத்திய நிதியஅமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்தார். ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு குறைவாக வருமானம் ஈட்டுவோர் தாமதமாக ரிட்டன் தாக்கல் செய்தால், அதற்கு ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். புதிய வருமானவரித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டுவோர், எந்தவிதமான அபராதமும் செலுத்தத் தேவையில்லை.

காலக்கெடுவை தவறவிட்டால் என்ன நடக்கும்

ஐடிஆர் கடைசித் தேதியையும தவறவிட்டால் வரி செலுத்துவோருக்கு பல பின்னடைவுகள் ஏற்படும். அதாவது வரி செலுத்துவோர் வரி அளவுக்கு ஏற்பட வட்டி செலுத்த வேண்டியதிருக்கும். இது கடந்த ஐடிஆர் தாக்கல் செய்த தேதியிலிருந்து கணக்கிட்டு ஒரு சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.

காலதாமதமான வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்பவர், மூலதனச் செலவுகளில் ஏற்பட்ட இழப்புகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது. இருப்பினும், சொத்து விற்பனையால் ஏற்படும் இழப்பு முன்னெடுத்துச்செல்லலாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews