மாணவன் இறப்பு: ஆசிரியர் 'சஸ்பெண்ட்’ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 31, 2022

Comments:0

மாணவன் இறப்பு: ஆசிரியர் 'சஸ்பெண்ட்’

IMG_20220831_100156
IMG_20220831_100330
செங்கல்பட்டு : நெரும்பூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர் இறந்தது தொடர்பாக, ஓர் ஆசிரியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். மற்றொரு ஆசிரியை 'டிஸ்மிஸ்' செய்து, கலெக்டர் உத்தர விட்டார்.இது குறித்து கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:திருக்கழுக்குன்றம் அடுத்த, நெரும்பூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 16 மாணவர்கள், கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்காக, அணுபுரம் சென்றனர்.

பின், கல்பாக்கம் கடற்கரை கடலில் மாணவர்கள் குளிக்க சென்றனர். அப்போது, 10ம் வகுப்பு மாணவன் மோகன், அலையில் சிக்கி மாயமானார்.கடந்த 28ம் தேதி, மெய்யூர் குப்பம் மீனவர் பகுதியில் மாணவர் சடலம் கரை ஒதுங்கியது.இச்சம்பவத்திற்கு காரணமான பள்ளி ஆசிரியர் ஞானசேகரன் 'சஸ்பெண்ட்' செய்யப்படுகிறார். பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியை விஜயா, பணியில் இருந்து 'டிஸ்மிஸ்' செய்யப்படுகிறார்.மேலும், பள்ளி தலைமை யாசிரியை யிடம், இது குறித்து விளக்கம் கோரப்பட்டு உள்ளது.முதல்வரின் நிவாரண நிதி, பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கூடுதல் நிவாரணம் வழங்க, ஆதிதிராவிடர் நல இயக்குனருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84730061